பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 127

கருதப்படட்டும்; அந்தக் குற்றத்தையும் துரோகத்தையும் வேண்டுமானால், இவனைப் போன்றவர்கள் வந்துத் தடுக்கட்டும். இந்த ரூபாவும் அருனாவும் யாரிடம் இருக்கிறார்கள், இப்போது? இல்லை, நான்தான் யாரிடம் இருக்கிறேன், இப்போது? யாரும் யாரிடமும் இல்லை! அப்படியிருக்கும்போது, நான் ஏன் இவர்களைக் காதலிக்கக் கூடாது? இல்லை, இவர்கள்தான் ஏன் என்னைக் காதலிக்கக் கூடாது!

காதல் என்றால் ஒருவன் ஒருத்தியைத்தான் காதலிக்க வேண்டும், ஒருத்தி ஒருவனைத்தான் காதலிக்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம். இருக்கட்டுமே, அதனாலென்ன? -பகிரங்கமாகக் காதலிப்பதுதானே பண்புக்குக் குறைவு!

அப்படியே இருந்தாலும் என்னப் பண்பு வேண்டிக் கிடக்கிறது, இந்தக் காலத்துக் காதலில் அந்தக் காலத்துக் காதல் என்றால் அதன் அர்த்தமே வேறு; இந்தக் காலத்துக் காதல் என்றால் இதன் அர்த்தமே வேறு இரண்டையும் ஒன்றாக்கி இவனைப் போன்றவர்கள் குழப்பிக்கொண்டு இருந்தால் அதற்கு நானா பொறுப்பு?

அந்தக் காலத்தில் காதலுக்கும் கற்புக்கும் தவறிக்கூடப் பங்கம் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக இறந்த கணவனோடு இறக்காத மனைவியையும் சேர்த்து வைத்துக் கொளுத்தினார்கள்; இந்தக் காலத்தில் அப்படியாக் கொளுத்துகிறார்கள்? ‘ஒருவன் போனால் இன்னொருவன் என்று மறுமணம் அல்லவா செய்துகொள்ளச் சொல்கிறார்கள் இதெல்லாம் எதைக் காட்டுகிறது, காதலுக்கும் கற்புக்கும் விடுதலை வேண்டும் என்பதைத்தானே காட்டுகிறது? அந்த விடுதலைதான் எனக்கும் வேண்டும், இவர்களுக்கும் வேண்டும் என்கிறேன் நான்-அதைத் தடுக்க இவன் யார்?

யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். -இவனை நேருக்கு நேராக எதிர்த்து நிற்பதென்பதுத்