பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 135

‘ஏற்கெனவே ஐந்து ரூபாய் வாங்கியிருக்கிறாளே, என்னிடம்’

‘அந்த அருணா இப்போது இல்லை அண்ணா, இவள் வேறு அருணா எனக்கு ஒன்றும் வேண்டாம்; நீ போய் வா!’ அருணா மறுபடியும் திரும்பினாள்; அதற்குள் ரூபா அவளைத் தேடிக்கொண்டு வந்து, ‘ஏண்டி அருணா, நீ அவரைப் பார்த்தாயா?” என்று கேட்டாள்.

‘எவரை: ‘ ‘அவரைத் தாண்டி, என்னுடன் வந்திருந்தாரே ஒருவர்...அவரை’

‘இல்லையே, உன்னோடு பார்த்ததுதான்; அதற்குப் பிறகு நான் அவரைப் பார்க்கவேயில்லையே’

‘தியேட்டரை விட்டு இருவரும் ஒன்றாய்த்தான் வெளியே வந்தோம்; “பஸ் ஸ்டாப்"பில் வந்து நின்று திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம்’

“ஒருவேளை கூட்டத்தோடு கூட்டமாக...’ ‘அப்படி ஏதாவது இருக்குமோ என்றுதான் நான் கூட்டம் கலையும் வரை அங்குமிங்குமாக அலைந்து அலைந்து, அவரைத் தேடு, தேடு’ என்று தேடிப் பார்த்தேன்; கால் வலித்ததுதான் மிச்சம்’

இந்தச் சமயத்தில், ‘அவன் வரமாட்டான்; இனி அவன் உங்களைத்தேடி வரவே மாட்டான்’ என்று யாரோ சொல்வது அவர்கள் காதில் விழுந்தது; இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்-மணி அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.

‘ஏன், உங்களுக்கும் தெரியுமா அவரை என்று ரூபா கேட்டாள்.

‘தெரியும், அவனுக்கு வாழ்க்கை ஒரு விளையாட்டு என்று!"