பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 139

போன்ற சிலர் தன்னை மதிக்க வேண்டுமென்றால், மதித்துத் தன்னிடம் மயங்கவேண்டுமென்றால், அப்படிச் சிலப் புத்தகங்களும் தன்னுடையப் புத்தக அலமாரியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக அவன் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பான்

அந்தப் புத்தகத்தை மட்டும் அவனிடம் இருந்து எப்படியாவது கிளப்பிவிட்டால்?-யாரால் முடியும் அது?ரூபா அவனுடன் கொண்டிருந்த தொடர்பு நீடித்திருந்தாலும்... நீடித்திருந்தால் மட்டும் என்ன? அவளிடம் அதை எப்படிச் சொல்லியிருக்க முடியும்? சொல்லியிருந்தால், அவள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? இல்லை, அவனைப் பற்றித்தான் என்ன நினைத்திருப்பாள்? -வெட்கக்கேடுதான்!

மணி அண்ணனிடம் சொன்னால் அது ஒரு வேளை நடக்கலாம்; ஆனால் அதை இப்போதா சொல்வது?-கூடாது, கூடவே கூடாது.

இன்று காலை மீனாட்சியம்மாள் சொன்னார்களே, ‘இந்த உலகத்தில் நீ சிரிக்கும்போது உன்னுடன் சேர்ந்து சிரிக்க எத்தனை பேர் வேண்டுமானாலும் தயாரா யிருப்பார்கள்; அழும்போது உன்னுடன் சேர்ந்து அழ ஒருவரும் தயாராயிருக்கமாட்டார்கள்!’ என்று. அது என்னமோ உண்மைதான். ஆனால் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் பாக்கியசாலி தான் அழுதால் தன்னுடன் சேர்ந்து அழத் தனக்கு ஓர் அண்ணா இருக்கிறார்; அவர்தான் மணி அண்ணா

கால்கள் தங்கள் விருப்பம்போல் நடக்க, மனம் தன் விருப்பம்போல் எண்ணிக் குமைய, அவள் பஸ்ஸை மறந்து-ஏன், தன்னையே மறந்து போய்க்கொண்டிருந்தபோது, ‘விர்ரென்று வந்த ‘டாக்சி ஒன்று அவளுக்கு அருகே டக்’ கென்று நின்றது; அந்த டாக்சியிலிருந்து வெளியே வந்த ஒரு கை ‘லபக்கென்று அவள் கையைப் பிடித்தது