பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 141

விடுகிறார்கள் என்று இன்னொரு குரல் அந்தக் காருக்கு உள்ளேயிருந்து வந்தது.

“அது யார், அது?’ என்று குனிந்து பார்த்தாள் அருணா. அதற்குள், ‘என்னம்மா அப்படிப் பார்க்கிறாய்? அவர் வேறு யாருமில்லை; என்னுடைய நண்பர் சுகானந்தம்தான் வழியில் அவருடைய கார் படுத்துக்கொண்டு விட்டது; தவித்துக் கொண்டு இருந்தார். நான்தான் போகிற போக்கில் உங்களையும் கொண்டுபோய் உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன், வாருங்கள்’ என்று அவரை அழைத்துக் கொண்டு வருகிறேன். மனிதர் எதிலும் சுதந்திரமில்லை என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்கிறாரே தவிர, இவரைப் பொறுத்தவரை எல்லாச் சுதந்திரங்களையும் எந்தவிதமான தடையுமின்றி அனுபவித்துக்கொண்டுதான் வருகிறார்:என்ன சுவாமி, நான் சொல்வது சரிதானே?’ என்றார் ஆபத் சகாயம், தன் கண்களில் ஒன்றை மட்டும் ஒர் அடி அடித்து. இம்மாதிரி கண்ணடிக்கும் வழக்கமெல்லாம் சோதாப் பயல்க'ளிடம்தானே உண்டு!-ஆனால் ஒரு வித்தியாசம்சோதாப் பயல்கள் அடித்தால் அது சோதாத்தனம்; பெரிய மனிதர்கள் அடித்தால் அது பெரிய மனிதத்தனம்

எனவே, அவர் தன்னைப் பார்த்துக் கண் அடித்ததைச் சிறுமையாக எடுத்துக்கொள்ளாமல் பெருமையாகவே எடுத்துக்கொண்டு, ‘அப்படியே அனுபவித்தாலும் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதானே அனுபவிக்க வேண்டியிருக்கிறது?’ என்றார் சுகானந்தம்.

‘யாரிடம் இதைச் சொல்கிறீர்கள், என்னிடமா? நீங்கள்தான் யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக்கொண்டு விடுவீர்களே, ஐயா! நீங்களாவது, அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதாவதுநீ ஏறம்மா, வண்டியில்’ என்றார் ஆபத்சகாயம்.

அப்போது அவரை முந்திக்கொண்டு சுகானந்தம் தான் உட்கார்ந்திருந்த பின் nட்'டின் கதவைத் திறந்துவிட,