பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 காதலும் கல்யாணமும்

“ஆமாம், போங்கள்! அந்த ஐநூறு ரூபாய்க்காகப் போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்குமாக ιμιτή அலைவதாம்?”

‘அதற்குமேல் உங்கள் விருப்பம்; நான் வரட்டுமா?” திரும்பினார் ஆபத்சகாயம்; ‘'உட்காருங்கள், காபி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்றார் சுகானந்தம், அவரை விட்டாலும் அவருடையப் பெண்ணை விட மனமில்லாமல்! அதற்குள், ‘'சமையற்காரன் கூட இல்லையே, காபிப் போட?” என்றாள் கீதா, கையைப் பிசைந்துக் கொண்டே.

‘அவன் இல்லாவிட்டால் என்ன, கூர்க்காவை ஒட்டலுக்கு அனுப்பி வாங்கி வரச் சொல்லேன்?’ என்றார் அவர்.

‘சரி என்று அவள் வெளியேப் போனாள்; ‘எங்களால் உங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம்?’ என்றார் ஆபத்சகாயம். ‘நன்றாயிருக்கிறது, வீடு தேடி வந்தவர்களை சும்மாவா அனுப்பிவிடுவது? நீங்கள் இங்கேயே உட்கார்ந்திருங்கள்; நான் போய் உடை மாற்றிக் கொண்டு வந்துவிடுகிறேன்!” என்று சுகானந்தம் உள்ளே போனார்.

‘அதுவரை டாக்சி நிற்பானேன்? போகும்போது வேறு டாக்சி பிடித்துக்கொண்டால் போகிறது!’ என்று நினைத்த ஆபத்சகாயம், ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அருணாவிடம் நீட்டி. ‘அந்த டாக்சியை அனுப்பிவிட்டு வாம்மா!’ என்றார்.

அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது அவள் கண்ட ஒரு காட்சி அவளைத் திடுக்கிட வைக்கவே, ‘அப்பா, அப்பா இங்கே பார்த்தீர்களா, அப்பா என்றாள் அவள்.

‘என்னம்மா அது?’ என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தார் ஆபத்சகாயம்.

“அதோ பாருங்கள்!"