பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 காதலும்கல்யாணமும்

அங்கே, அதாவது பங்களாவின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு சினிமா தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அந்தத் தியேட்டருக்குள்ளே பத்துப் பதினைந்து சோபாக்களே போடப்பட்டிருந்தன. அந்த சோபாக்கள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் ஒரு டீபாய்; அவற்றுக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுதிரை; அந்தத் திரையின் இரு மருங்கிலும் ஒர் ஆணும் பெண்ணும் நிர்வாணக் கோலத்துடன் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டிருக்கும் ஒவியம்!

அந்தச் சின்னஞ் சிறு சிங்காரத் தியேட்டருக்குள்ளே போய் அமர்ந்ததும் அங்கிருந்த ஒரு பொத்தானை ஒர் அழுத்து அழுத்தினார் சுகானந்தம்; கீதா வந்து நின்றாள். “சமையற்காரன் வந்துவிட்டானா?” என்றார் அவர். “வந்துவிட்டான்’ என்றாள் அவள். ‘கொண்டு வரச்சொல்!'-அவர் சொன்னது அவ்வளவு தான்; அடுத்த வினாடியே இரண்டு விஸ்கி புட்டிகள் வந்து அவர்களுக்கு எதிர்த்தாற்போல் உட்கார்ந்தன. அவற்றைத் தொடர்ந்து நாலு சோடா புட்டிகள், இரண்டுக் கண்ணாடி டம்ளர்கள் ஆகியவையும் வந்து சேர்ந்தன.

‘துணைக்கு ஏதாவது...’ சமையற்காரன் முடிக்கவில்லை; ‘வழித்துணை இல்லா மல் முடியுமா? கொண்டு வா, இரண்டு கோழி, ஒரு டஜன் முட்டை’ என்ற உத்தரவு பிறந்தது சுகானந்தத்தினிடமிருந்து.

‘இதோ கொண்டு வந்துவிட்டேன்’ என்று அவன் காற்றாய்ப் பறந்ததும், ‘இரண்டு பேரும் சேர்ந்தாற்போல் இப்படிப் பொழுதைப் போக்கி ரொம்ப நாட்களாகிவிட்டன, இல்லையா?” என்றார் சுகானந்தம், விஸ்கி புட்டிக்குத் ‘திறப்பு விழா நடத்திக்கொண்டே.

ஆபத்சகாயம் சொன்னார்; ஆற்றாமையுடன்தான் சொன்னார்:

‘என்று நான் பதவியிலிருந்து விலகினேனோ, அன்றிலிருந்து நீங்கள் எங்கே என்னைக் கவனிக்கிறீர்கள்?"