பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 காதலும்கல்யாணமும்

என்றான் அவன், தனக்குள் மட்டும் ‘இந்நேரத்தில் அவள் எங்கே போயிருப்பாள்? என்று யோசித்துக் கொண்டே.

அப்போது தெருக்கதவை யாரோ தடதடவென்று தட்டும் சத்தம் கேட்கவே, ‘'அதோ வந்துவிட்டாள் போல் இருக்கிறது’ என்றான் அவன், தன் தாயாரிடம்.

‘அவளோ, அவள் அப்பாவோ?’ என்று சொல்லிக் கொண்டே சென்று திறந்தாள், அவன் தாயார்.

25. மழியாதை தெழியாத கழுதை!’’

பெந்தது ஆபத்சகாயமல்ல; அருணாதான்-வாசலில் முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே பீதி நிறைந்த கண்களுடன் நின்ற அவளைக் கண்டதும், ‘என்னம்மா, என்ன?’ என்று திடுக்கிட்டுக் கேட்டாள், அன்னபூரணி.

‘ஒன்றுமில்லை, அம்மா என் உடம்பு என்னவோ போல் இருக்கிறது; நான் போய்ப் படுத்துக் கொள்கிறேன்!” என்று சொல்லிக்கொண்டே, அவள் தன் அறைக்குள் சென்று உடனே படுத்துக்கொண்டும் விட்டாள்!

“ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொள்ளேண்டி’ என்றாள் அவள் தாயார், அவளைத் தொடர்ந்து.

‘எனக்கு ஒன்றும் வேண்டாம்; பசிக்கவில்லை!” என்றாள் அவள்.

தன் பங்குக்குத் தானும் ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே என்பதற்காக, ‘அவளை ஏன் அம்மா, அனாவசியமாகத் தொந்தரவு செய்கிறாய்? அவ்வளவு தூரம் வெய்யிலில் போய் அலைந்துவிட்டு வந்திருக்கிறாளே, உடம்பு எப்படி இருக்கிறதோ, என்னமோ!’ என்றான் மோகன், தன் படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டே