பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 171

ஆயினும் ஒரு நம்பிக்கை. அவள் தனக்காக அந்தப் பொய்யை அவசியம் சொல்வாள் என்ற ஒரு புது நம்பிக்கையுடன் அன்றிரவு அவன் தன் வீட்டை அடைந்தபோது, மணி ஒன்பதுக்குமேல் இருக்கும். ‘என்னதான் விடுமுறை விட்டாலும் இப்படியா? நேரத்தோடு வீட்டுக்கு வர வேண்டாமா?’ என்றாள் வாசலில் நின்றுகொண்டிருந்த அவன் தாயார்.

‘மணி ஒன்பதுதானேம்மா, ஆகிறது?” என்றான் அவன், ஸ்கூட்டரைக் கொண்டுபோய் உள்ளே நிறுத்தி.

‘வீட்டில் இருந்தால் ஏழு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விடும் உனக்கு; வெளியே போனால் ஒன்பது மணிக்குக் கூடப் பசிக்கவில்லை போலிருக்கிறது’ என்றாள் அவள், தெருக் கதவை சாத்தித் தாளிட்டுவிட்டு.

‘கொள்ளைப் பசி, கொண்டு வா, சோற்றை’ என்று சொல்லிக்கொண்டே அவன் குழாயடியை நோக்கி நடக்க, ‘அப்பாவும் மகளும் இன்னும் எப்போதுதான் வருவார்களோ? என்று தனக்குள் அலுத்துக்கொண்டே அடுக்களையை நோக்கி நடந்தாள் அவள்.

சாப்பிடும்போதே நித்திராதேவியின் வசப்பட்டு விட்ட மோகன், சாப்பிட்டு முடிந்ததும் தன் அறைக்குச் சென்றான், படுக்க. அப்போது அருணாவைப் பற்றிய நினைவு ஏனோ வந்தது அவனுக்கு. அதற்குள் தூங்கிவிட்டாளா, என்ன?” என்று எண்ணிக்கொண்டே அவளுடைய அறையை எட்டிப் பார்த்தான்; காலியாயிருந்தது. ‘'அருணா இன்னும் வர வில்லையா, அம்மா’ என்றான் அவன் போகிற போக்கில்.

‘இல்லையேடா!’ என்றாள் அவள். ‘இல்லையாவது, ஆறு மணிக்கே வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வந்தாளே? என்று சொல்வதற்காக வாய் எடுத்தான் அவன்; அதற்குள் அவளைத் தான் சினிமாவில் பார்த்தது அம்மாவுக்குத் தெரியக்கூடாது என்றுத் தோன்றவே, ‘பஸ் இன்னும் வந்து சேரவில்லைப் போலிருக்கிறது!'