பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 காதலும்கல்யாணமும்

அதிலும், ஏழைகளைக் கண்டால் அவருக்குப் பிடிக்காது; அதுதான் போகட்டுமென்றால் யோக்கியர்களைக் கண்டாலும் அவருக்குப் பிடிக்காது!

ஒருவிதத்தில் அயோக்கியர்களை வேண்டுமானால் அவருக்குப் பிடிக்கும்; பணக்காரர்களை வேண்டுமானால் அவருக்குப் பிடிக்கும்!

இந்த வேடிககையான மனிதரை விட்டுவிட்டு, என்னைப் போய் வேடிக்கையான மனிதர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறானே, இந்த சங்கர்?

இதிலுள்ள இன்னொரு சங்கடத்தை வேறு அவன் மறந்து விட்டான்-விஷயம் அவருடைய மகனைப் பற்றியதாயிருந்தாலும், அதில் நானுமல்லவா சம்பந்தப் பட்டிருக்கிறேன்; என்னை விட்டுத் தள்ளினாலும் அவருடைய மகள் அருணாவும் அல்லவா அதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாள்? அதை எப்படி அவரிடம் சொல்வது? சொன்னால் அவளுக்கு நான் தந்த வாக்குறுதி என்ன ஆவது? சொல்லாவிட்டால், சுந்தர் அந்த வலையை ஏன் விரித்தான் என்பதை நான் அவருக்கு எப்படி விளக்குவது?

கடவுளே, அவனைப் பிடித்துக்கொண்டுப் போன பாவிகள் என்னைப் பிடித்துக்கொண்டு போயிருக்கக் கூடாதா? எத்தனையோத் தொல்லைகள் எனக்கு மிச்சமாகியிருக்குமே! அதைப்பற்றி இப்போது யோசித்து என்ன பிரயோசனம்? உள்ளே போன மோகன் எப்படியாவது வெளியே வர வேண்டும்; அதற்கு அவரை விட்டால் வேறு யாரும் கிடையாதா?

ஆபீசர் பரந்தாமனைப் போய்ப் பார்த்தால் என்ன? அவர் ஜாமீன் கொடுத்தால் அவனை விட்டுவிடுவார்கள். ஆனால், அதற்குப் பிறகு வழக்கு என்று ஒன்று நடப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களெல்லாம் நடக்குமே, அதைத் தடுக்க முடியுமா அவரால்? அப்படியே தடுப்பதாயிருந்தாலும் அவருக்கு இதெல்லாம் தெரிவதை அவன் விரும்புவானா?