பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 காதலும்கல்யாணமும்

வற்புறுத்திக் கேட்கிறேன், தெரியுமா? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்குப் பெரிய ஏற்றுமதி இறக்குமதி வியாபாரி என்று பெயர்; ஆனால் அவர் செய்வதெல்லாம் கள்ளக் கடத்தல் வியாபாரம்தான் அதையும் அவர் சிறிய அளவில் செய்யவில்லை; பெரிய அளவில் செய்கிறார். அதனால் பணம் அவரிடம் என்ன பாடு படுகிறது தெரியுமா? தண்ணிர் படும்பாடு படுகிறது; அந்தப் பணத்தைக் கொண்டு கடவுள் ஒருவரைத்தான் அவரால் விலைக்கு வாங்க முடியவில்லை; மற்றவர்களையெல்லாம் வாங்கிவிட முடிகிறது! எப்படி வாழ்கிறார் மன்னன்? மன்னன் என்றால் மன்னன்தான்; அசல் மன்னன் கூட அந்தப் போலி மன்னனைப்போல் வாழ முடியாதுபோல் இருக்கிறது’

இதைக் கேட்டதும் பற்களை நறநற வென்று கடித்தபடி ‘வாழட்டும், வாழட்டும்; அணையப்போகும் விளக்கு சுடர் விட்டு எரிவது இயற்கைதானே? எரியட்டும், எரியட்டும்’ என்றுக் குமுறினான் மணி.

‘இப்படியெல்லாம் பேசி நீங்கள் வேறு, நான் வேறு என்று ஆக்கிவிட்ாதீர்கள்; என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்!’ என்றார் ஆபத்சகாயம், அப்பொழுதும் அவனை விடாமல்!

‘என்னைப் போன்ற இளைஞர்கள் தவறானக் காரியத்தில் ஈடுபடும்போது அதைத் தடுக்க வேண்டியவர் நீங்கள்; அப்படிப்பட்ட நீங்களே இப்படியெல்லாம் பேசுவது எனக்கு எவ்வளவு வருத்தமாயிருக்கிறது, தெரியுமா?” என்றான் அவன், உண்மையான வருத்தத்துடன்.

ஆனால் அவரோ அதையும் போலியாக எண்ணி, “எதைத் தடுக்கச் சொல்கிறாய் என்னை: மூதேவி வாசம் செய்யும் இந்த வீட்டில் சீதேவி வாசம் செய்ய வருகிறாளே, அவளையா தடுக்கச் சொல்கிறாய் என்னை? அது என்னால் முடியவே முடியாது!’ என்று தன் தலையை நயம்பட’ ஆட்டினார்!