பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காதலும் கல்யாணமும்

கேட்டாள். அடுத்தாற்போல் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள், ‘இல்லை, உங்களுக்கு மூளையிருக்கிறதா என்று கேட்கிறேன்!” என்றாள் அவள், மறுபடியும் அவனுடைய கன்னத்தில் இடித்துக் கேட்காத குறையாக!

‘இருக்கிறது என்றுதான் இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்!-ஏன், இல்லையா?” என்று அவனும் அதே ரகசியக் குரலில் அவளையே திருப்பிக் கேட்டான், அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே.

‘இருந்தால் அந்தப் பியூன் நம்மைப் பார்த்துச் சிரித்தானே, அவனை நீங்கள் சும்மா விட்டிருப்பீர்களா?”

‘அதைச் சொல்கிறாயா? உத்தியோகத்தில் எப்படியிருந்தாலும் வயதில் நம்மைவிட மூத்தவர் அல்லவா, அவர்? அதனால் அவருடைய ஆசீர்வாதம் நல்லதுதானே என்று பேசாமல் இருந்துவிட்டேன்’

‘ஐயோ! ஆசீர்வாதமா வேண்டும் ஆசீர்வாதம்.9 மூஞ்சைப் பார், மூஞ்சை!” என்று அவள் தன் முகத்தை அஷ்ட கோணல்களாக்கி அழகு காட்டியபோது, அந்த ‘அஷ்டகோணல்'களும் ‘அஷ்ட லட்சணங்க"ளாகத் தோன்றியது அவனுக்கு. ஆகவே, “எங்கே இன்னொரு தரம், எங்கே இன்னொரு தரம்’ என்றான் அவன், அவளைக் கெஞ்சாக் குறையாக.

‘எதைக் கேட்கிறீர்கள்?’ என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

அவன் பெருமூச்சு விட்டான் ‘என்ன, உடம்பு கிடம்பு சரியில்லையா?’ என்று கேட்டாள் அவள், மீண்டும்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை; எதைக் கேட்கிறீர்கள்?” என்றுக் கேட்கிறாய் - நான் கேட்பதையெல்லாம் நீ கொடுத்து விடவாப் போகிறாய்?” என்றான் மீண்டும் அதே பெருமூச்சுடன்.