பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 காதலும்கல்யாணமும்

மனிதனாக, உணர்ச்சி இருந்தும் உணர்ச்சி இல்லாத மனிதனாக நான் ஏன் நடமாட வேண்டும்?

அது என்னால் முடியாதய்யா, அது என்னால் முடியவே முடியாது!

இந்தக் கடைசி வார்த்தையை மட்டும் கேட்டுக் கொண்டே வந்த சங்கர், “எது முடிந்தாலும் முடியா விட்டாலும் இந்த அறையைக் காலி செய்ய உங்களால் முடியுமென்று நான் நினைக்கிறேன்; அதை முதலில் செய்யுங்கள்!’ என்றான் தன் கையிலிருந்தக் காபியை அவனுக்கு முன்னால் வைத்து.

‘சர்மாஜிக்குப் பயந்தா?’ என்றான் மணி, சிரித்துக் கொண்டே.

‘அவர் உங்களுக்குப் பயப்படுவதைத்தான் நீங்கள் விரும்பவில்லையே?’ என்று அவன் சொல்லைக் கொண்டே அவனை மடக்கினான் சங்கர்.

‘ஆம்; அவர் மட்டும் என்ன, இந்த உலகத்திலுள்ள யாருமே என்னைக் கண்டு பயப்படுவதை நான் விரும்பவில்லைதான்!” என்றான் அவன்.

32. பெருமைக்கு இழுக்கு

கிTந்தி நகரிலிருந்து பார்வதி பவனத்தை நெருங்கி யதும், ‘என்னை இங்கேயே விட்டுவிடுங்கள்!’ என்றான் சுந்தர்.

‘ஏன், உள்ளேயேக் கொண்டு வந்து விடுகிறேனே?” என்றார் ஆபத்சகாயம்.

‘'வேண்டாம்; இந்த நிலையில் நான் இருப்பது அம்மாவுக்கும் தெரிய வேண்டாம், அப்பாவுக்கும் தெரிய வேண்டாம்!”