பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 229

‘அதற்காக நீ இங்கிருந்து எப்படிப் போவாயாம்?”

“மெல்ல மெல்ல நடந்தேப் போய்விடுகிறேன்; நீங்கள் காரைக் கொண்டு போய் அப்பாவிடம் விட்டுவிடுங்கள்’

‘இப்படிச் சொல்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை அடிப்பதற்கு முன்னாலேயே அவனை நான் தடுத் திருப்பேனே இப்போது நீயே அல்லவா அவனைத் தண்டனையிலிருந்து தப்ப வைக்கப் பார்க்கிறாய்?” என்றார் அவர், மீண்டும் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக.

‘அவன் தண்டனைப் பெற வேண்டும் என்பதற்காக என்னுடைய மானத்தை நான் காற்றில் பறக்கவிட முடியுமா, என்ன? நீங்கள் போய் வாருங்கள்’ என்றான் அவன், அவருடைய பதிலைக் கூட எதிர்பாராமல் இறங்கிக் கொண்டே. ஆபத்சகாயம் அவனைத் தடுக்கவில்லை; “எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று வந்த வழியே திரும்பினார், அதற்கு மேல் அவனைச் சமாளிக்க முடியாமல்.

அவர் போனதை ஒரு முறைக்கு இரு முறையாகப் பார்த்து நிச்சயப்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்தான் சுந்தர். தன்னால் முடிந்தவரை சமாளித்தும் சமாளிக்க முடியாமல் அவன் ஆடி அசைந்து வருவதைப் பார்த்ததும், “ஐயோ, மகனே’ என்று அலறிவிடவில்லை பார்வதி; “என்னடா, எவன் உதைத்தான் இப்படி?’ என்றாள் அனுபவபூர்வமாக.

‘என்னையாவது, எவனாவது உதைப்பதாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா, மாடிப் படியிலிருந்து கீழே உருண்டுவிட்டேன்’

‘குடித்துவிட்டா?”

‘போம்மா! என்றோ ஒரு நாள் வாழைப்பழம் தின்று விட்டு வந்தாலும் வந்தேன், அன்றிலிருந்து நீ என்னைக் குடிகாரன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாயே? நீ