பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 233

‘சரி, இது விளையாட்டுத்தனமாகவே இருக்கட்டும். இதற்கு முன் ஒரு நாள் எங்கள் வீட்டில் என்ன நடந்ததென்று தெரியுமா, உங்களுக்கு? என் கோட்டுப் பையில் ஒரு பாம்புக்குட்டி இருந்தது!-என்ன பாம்புக்குட்டி என்கிறீர்கள்? -நல்ல பாம்புக்குட்டி ஐயா, நல்ல பாம்புக்குட்டி’

‘அது எப்படி வந்தது, அங்கே?’ ‘அதையும் அவன்தான் கொண்டு வந்து போட்டி ருப்பானோ என்று எனக்கு ஒரு சந்தேகம்’

“சீச்சீ, அப்படியிருக்காது!” ‘உங்களுக்குப் பணத்தின் அருமையைப் பற்றித்த்ான் தெரியுமே தவிர, அதன் குணத்தின் அருமையைப் பற்றித் தெரியாது; அதனால்தான் அப்படிச் சொல்கிறீர்கள்-சரி, அது இருக்கட்டும். நீங்கள் எனக்காக ஓர் உதவி செய்கிறீர்களா?”

‘என்ன உதவி0’ ‘நீங்கள்தான் துப்பறியும் இலாக்காவில் வேலை பார்த்திருக்கிறீர்களே, எதற்கும் அந்தப் பயல்மேல் ஒரு கண் வைத்துப் பாருங்களேன்?”

‘அதற்கென்ன, பார்க்கிறேன். அவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?”

“அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள் எந்தத் தொழிலைச் செய்தாலும் அந்தத் தொழிலை நேர் வழியில் செய்தால் பணம் பண்ண முடியாது என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே? அதற்காக எதுவாயிருந்தாலும் நாளை அவனுக்குத் திருடவும் தெரியவேண்டும், பதுங்கவும் தெரிய வேண்டுமே என்று சட்டம் படிக்கச் சொன்னேன்! எங்கே படிக்கிறான்; எத்தனையோ பொழுது போக்குகளில் அதையும் ஒரு பொழுது போக்காக வைத்துக் கொண்டிருக்கிறான்’

‘யோசனை நல்ல யோசனைதான்! ஆனால் பணம் அவனைப் படிக்க விடவில்லைபோலிருக்கிறது?” என்றார் ஆபத்சகாயம் சிரித்துக்கொண்டே'