பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 239

இவன், இன்று எப்படித்தான் இப்படி மாறிவிட்டானோ தெரியவில்லை?” என்றாள் பெருமூச்சுடன்.

ஆம், மோகன் மாறித்தான் போயிருந்தான் அதற்கு முக்கியமானக் காரணங்கள் இரண்டு. ஒன்று, எதற்கும் மாறாத பாமாவின் காதல்; இரண்டு எதற்கும் அஞ்சாத மணியின் வீரம்/

இந்த இரண்டும் சேர்ந்து அசடாயிருந்த அவனைச் சமர்த்தாக மட்டும் ஆக்கவில்லை; அரை மனித”னாயிருந்த அவனை ‘முழுமனித”னாகவும் ஆக்கிவிட்டிருந்தன.

அந்த முழு மனிதனைக் கண்டுதான் இப்போது அப்பாவும் மிரள்கிறார்; அம்மாவும் மிரள்கிறாள்!

இந்த நிலையிலே தன் தந்தையின் எதிர்காலக் கனவுகளிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்வது கூட அவ்வளவு பெரிதாகப் படவில்லை அவனுக்கு: அருணாவை விடுவிப்பதுதான் பெரிதாகப் பட்டது.

அவளுக்குத் தன்னால் என்ன செய்யமுடியும், எந்த வகையில் உதவ முடியும்?

இந்த யோசனையுடன்தான் அன்று காலை அவன் மணியின் அறையை அடைந்தான். அவன், இவன் சொன்னதையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, ‘இது கூட்டுறவு யுகம். இந்த யுகத்தில் ‘காதல் கல்யாணம் கூட்டுறவு வியாபாரமாயிருக்கிறது. கட்டாயக் கல்யாணம் தனியார் வியாபாரமாயிருக்கிறது. முதல் கல்யாணத்தில் லாபத்துக்கு அவ்வளவாக இடமில்லை; இரண்டாவது கல்யாணத்தில் லாபத்துக்கு நிறைய இடமிருக்கிறது. இவற்றில் உன் அப்பாவுக்கு எது பிடிக்குமோ, உனக்கு எது பிடிக்குமோ, என்ற வினாக்களுக்குத் தான் விடை காண வேண்டும். இதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு; நீ வேண்டுமானால் பாமாவுடன் கலந்து யோசித்துப் பாரேன்” என்று சொல்லிவிட்டான்.