பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 காதலும்கல்யாணமும்

இது குத்தலாகப் பட்டது மோகனுக்கு மணியுடன் வம்புக்கு நின்றான். அந்த வம்பு சண்டையாயிற்று; அந்தச் சண்டை பிறகு சமாதானமாயிற்று. கடைசியில், ‘இப்போது நீ வேலைக்கு வரப்போகிறாயா, இல்லையா?” என்றான் அவன் பொய்யான கோபத்துடன்; ‘வர முடியாது’ என்றான் இவனும் பொய்யான கோபத்துடன். “சரி” என்று அவன் கீழே இறங்கினான்; ‘தில்’ என்று அவனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு, இவன் இரண்டு கடிதங் களை எழுதி அவனிடம் கொடுத்தனுப்பினான். ஒன்று, விடுமுறைக்காகப் பரந்தாமனுக்கு இன்னொன்று, முடிந்தால் அன்று மாலை தன்னை வந்து பார்ப்பதற்காகப் பாமாவுக்கு. எது எப்படி ஆனாலும் அன்று மோகன் வீடு திரும்புவதாக இல்லை-அன்று மட்டும் என்ன, முடிந்தால் இன்னும் இரண்டு நாட்கள் கூட அவன் தன் அப்பாவுக்காக, ‘அஞ்ஞாத வாசம் செய்யத் தயாராயிருந்தான். அதனால் அவருடைய மனம் ஏதாவது மாறுதலை அடைகிறதா, இல்லையா என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள் வதற்காக, ஆனால் நடந்தது? அதற்கு நேர் விரோதமானது

யாரோ ஒருத்திக்காக இந்த மணி அந்த சுந்தருடன் வம்புக்கு நிற்க, அவன் இவனைப் பழி வாங்க நினைக்க, அதில் தான் சிக்கிக்கொள்ள, அதற்காகத் தன் அப்பாவின் உதவியை நாடுவதற்காக அங்கே இவன் போக, அன்று மாலையே அல்லவாத் தான் வீடு திரும்ப வேண்டியதாகி விட்டது?

அப்படித்தான் திரும்பினேனே, இவனைத் தடுத்து நிறுத்தவாவது முடிந்ததா, என்னால்? அதுவும் இல்லை!

எங்கிருந்தோ வந்தான் அந்த சுந்தர் அவனை ஒரு பிடி பிடித்துவிட்டு, இவன் போய்விட்டான் சர்மாஜியைக் கவனிக்க

அவர் என்ன, அவ்வளவு சாதாரணமானவரா?-'பயல் தொலைந்தான், இவனுக்காக இனி அப்பாவின் உதவியைக்