பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 காதலும் கல்யாணமும்

இந்தச் சூளுரையுடன் வழியெல்லாம் மணியைப் பார்த்துக்கொண்டே சென்ற மோகன், அவனைக் காணாமல் கடைசியாக அவன் அறையையே அடைந்து விட்டான்!

ஆனால் என்ன ஏமாற்றம்1-அங்கே அவன் கதவைத் தட்டியதும் அவன் எதிர்பார்த்தபடி மணி வந்து கதவைத் திறக்கவில்லை; சங்கர்தான் வந்து கதவைத் திறந்தான்.

“என்னடா சங்கர், எங்கே மணி?” ‘பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கிறார், சார்!” “என்ன,பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலா?” “ஆமாம் சார், அங்கேதான் அவர் இருக்கவேண்டும்!” ‘என்ன உளறுகிறாய்? இருக்கிறார் என்கிறாய், இருக்க வேண்டும் என்கிறாய்...!”

‘நிலைமை அப்படி சார் இருந்தால் அவர் பைத்தியக் கார ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் போலீஸ் லாக்-அப்"பில் இருக்கவேண்டும்...’

‘அப்போதே நினைத்தேன்; அவனையும் பிடித்துவிட்டார்களா, இங்கே?’

‘இல்லை; இவர்தான் என்னைப் பிடித்துக் கொள்ளுங் கள் என்று சொல்வதற்காக அவர்களைத் தேடிக்கொண்டு (βιμπουτπήit'’

“எதற்கு?” ‘நான்தான் உங்களிடம் சொன்னேனே, அந்த சுந்தரைப் பற்றி-அவனை இவர் அடித்துவிட்டாராம்’

‘ஒ, அதுவா? அது எனக்கும் தெரியும்; அதற்குப்பின் என்ன ஆயிற்று? அதுதானே தெரிய வேண்டும், எனக்கு’

‘எனக்கும் அதுதான் தெரியவில்லை, சார் ஏழு மணி இருக்கும்; அறையின் சாவியை என்னிடம் கொடுத்து, நான் திரும்பி வரும்வரை இதை நீயே வைத்துக்கொள் என்றார். ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டேன்; சுந்தரை அடித்து