பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 249

களிலிருந்துதான் நாற்பத்தெட்'டின் அருமை பெருமை களைப் பற்றி நான் ஓரளவு அறிந்துக் கொள்ள முடிந்தது.

அவற்றையெல்லாம் இங்கே விவரிக்க நான் விரும்ப வில்லை; சுருக்கமாகச் சொல்லப்போனால், அது ஒரு நாய்-சொரி பிடித்த நாய். வெறி பிடித்த நாய். அவ்வளவே அந்த நாயை உங்களுக்கு எதிர்த்தாற்போலேயே என்னுடன் விளையாட விட்டு நீங்கள் வேடிக்கை பார்த்த போதுக் கூட உங்கள் மேல் நான் கோபம் கொள்ளவில்லை; மாறாக, வருத்தமேக் கொண்டேன்-இப்படியும் ஓர் அசட்டு அப்பா நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறாரே என்று

அதே நாயை அதன் விருப்பத்துக்கு இணங்க நான் மணக்க வேண்டுமென்று அடுத்த நாளே நீங்கள் வந்து சொன்ன்போதுக்கூட, உங்கள் மேல் நான் ஆத்திரம் கொள்ள வில்லை; மாறாக, அனுதாபமேக் கொண்டேன்- பாழும் பணம் உங்களை என்னப் பாடு படுத்துகிறது என்று எண்ணி அத்துடன் நில்லாமல், அதற்காக என்னை நீங்கள் அறைய வேறு வந்துவிட்டீர்களே, அப்போதுதான் அந்த அறை என் கன்னத்தில் விழவில்லை அப்பா, இதயத்திலேயே விழுந்துவிட்டது!

அதுவும் எப்போது விழுந்தது என்கிறீர்கள்?-எந்த ‘இருபத்து நாலு என்னை மனப்பூர்வமாகக் காதலிப்பது போல் நடித்து, எந்த இருபத்து நாலு என்னை மனப்பூர்வமாக ஏமாற்ற நினைத்ததோ, அந்த ‘இருபத்து நாலை எண்ணி நான் குமுறிக்கொண்டிருந்தபோது, உங்கள் அறை விழுந்தது என் இதயத்தில்!

அதையும் தாங்கியிருப்பேன், ‘மணி என்றோர் அண்ணா இருக்கிறார் என்ற தைரியத்தில்1-ஆம் அப்பா, ‘இருபத்து நாலிடமிருந்து மட்டுமல்ல; நாற்பத்தெட்டிடமிருந்தும் அந்த அண்ணாவால் என்னைக் காப்பாற்ற முடியும்!-ஆனால் என்ன பிரயோசனம்? உங்களுக்குள்ளப் பணப் பைத்தியம் எங்களை மானத்தோடு வாழவிடாது போலிருக்கிறதே, இந்த உலகத்தில்?