பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 காதலும்கல்யாணமும்

அதனால்தான் வாழ்வைத் தழுவ வேண்டிய இந்த வயதிலே நான் சாவைத் தழுவுகிறேன். என்னுடைய சாவாவது உங்களுடையப் பணப் பைத்தியத்தைத் தெளிய வைக்கட்டும்; அதன் பலனாக அண்ணன் மோகனுக்காவது அவனுடைய விருப்பப்படி கல்யாணம் நடக்கட்டும்.

அம்மாவை எனக்காக அழ வேண்டாமென்று சொல்லுங்கள்; அவர்கள் எனக்காக அழுவதைக் காட்டிலும் உங்களுக்காக அழுவது நல்லது

நான் வருகிறேன்!-இந்த நேரத்தில் கூட என் மரணத் தைப் பற்றியக் கவலையை விட, என்னுடைய நகைகளைப் பற்றியக் கவலை அதிகமாயிருக்கும் உங்களுக்கு- விடுங்கள், அந்தக் கவலையை, அவையனைத்தும் இன்சூர் செய்யப் பட்ட பார்சல் மூலம் நாளை உங்களுக்குக் கிடைக்கும்!

இது உங்களுக்குத் தவிர்க்கமுடியாத ஏமாற்றம்தான்; இருந்தாலும் தாங்கிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நான் வரட்டுமா?-டாடா! அளவு கடந்த மகிழ்ச்சியுடன்

உங்களை விட்டுப் பிரியும் அருமைக் குமாரி, அருணா. ‘ பின் குறிப்பு: இந்தக் கடிதத்தையும் பார்சலிலேயே வைத்திருக்கக் கூடாதா?’ என்று நீங்கள் நினைக்கலாம்; அப்படி வைத்தால் ஊர் சிரிக்காமல் போய்விடுமே என்றுதான் வைக்கவில்லை. அது சிரித்தாலாவது புத்தி வராதா, உங்களுக்கு?” கடிதத்தைப் படித்து முடித்ததும் மணி அழவில்லைசிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

ஊர் சிரிக்க வேண்டும் என்பது உன்னுடைய எண்ணமானால், இந்தக் கடிதத்தை நான் மறைப்பது தவறு!-இதோ வைத்துவிட்டேன் அருணா. உன்னுடைய