பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 காதலும் கல்யாணமும்

பிரிவை நான் எப்படிச் சகிப்பேன்? உன்னுடைய மறைவை நான் எப்படி மறப்பேன்?

உலகமெல்லாம் சமாதானத்தில்தான் சந்தோஷம் கிடைக்கும் என்கிறார்கள்; ஆனால் எனக்கோ உன்னுடன் சண்டையிடுவதில்தான் சந்தோஷம் இருந்தது-அந்தச் சந்தோஷத்துக்காக இனி நான் யாருடன் சண்டையிடுவேன், யாருடன் சச்சரவிடுவேன்?

நீ இல்லாத அந்த வீட்டில் இனி என்ன இருக்கப் போகிறது, எனக்கு?-அப்பாவின் உருட்டலும் மிரட்டலும் இருக்கும்; அம்மாவின் கண்ணிரும் கம்பலையும் இருக்கும்:அதைத் தவிர அன்புக்கென்று ஒரு ஜீவன், ஆசைக்கென்று ஒரு ஜீவன் அங்கே ஏது அருணா, ஏது?...

இந்த ஆறாத் துயருடன் அவன் ஆழ்கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது, ‘ஏன், நான் இல்லையா? என்பது போல் பாமா வந்து நின்றாள், அவனுக்கு எதிரே!

அவளைக் கண்டதும், ‘நீ எப்படி வந்தாய், இங்கே?’ என்றான் அவன், அந்த நிலையிலும் வியப்புடன்.

‘உன்னைப் பார்க்க வேண்டுமென்று சொன்னார்கள்; அழைத்துக்கொண்டு வந்தேன்’ என்றான் மணி, அவளை முந்திக்கொண்டு.

37. வாழ்க்கையிலும் மாணவி

ஞானி கடவுளை நெருங்குகிறானோ இல்லையோ, விஞ்ஞானி கடவுளை நெருங்குகிறான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

அந்த விஞ்ஞானியாலேயே இதுவரை விடை காண முடியாத புதிர்கள் இன்னும் எத்தனையோ இந்த உலகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.