பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 281

ஏற்கெனவேக் காதலில் ஏற்பட்ட தோல்வியாயி ருக்குமோ? - அப்படியிருந்தால், சாகத் துடிப்பது வேண்டு மானால் நியாயமாயிருக்கலாம்; வாழத் துடிப்பது எப்படி நியாயமாயிருக்க முடியும்?

ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாகத் தெரிகிறது . அதாவது, இவள் தன் வீட்டுக்கு இன்னொரு முறை உயிரோடு போக விரும்பவில்லை!

ஏன், என்னக் காரணம் - மோகனுக்குத் தெரியலாம்; ஆனால் அதை அவரிடம் எப்படிக் கேட்பது?

கேட்காவிட்டாலும் விஷயத்தை அவரிடம் சொல்லிவிட வேண்டியதுத் தன் கடமை - அதற்கு மேல் அவர் தன் தங்கையை எந்த வழியில் அழைத்துச் செல்கிறாரோ, அந்த வழியில் அழைத்துச் செல்லட்டும்’

இந்தத் தீர்மானத்துடன்தான் அன்று அவர் ஆபீசுக்குள் நுழைந்தார்; நுழைந்ததும் மோகன் வழக்கம்போல் உட்காரும் இடத்தைப் பார்த்தார் - காலியாயிருந்தது; இது என்ன முட்டாள்தனம் இன்று அவர் எப்படி வேலைக்கு வர முடியும்?’ என்று தன்னைத் தானே கடிந்துக் கொண்டுத் தன் அறைக்குள் நுழைந்தார்.

அவர் தன் ஆசனத்தில் அமர்ந்ததும், மின் விசிறியைச் சுழல விட்டுவிட்டுப் போவதற்காகப் பிச்சையா வந்தான் உள்ளே. அவனிடம், ‘மணி சார் வந்துவிட்டாரா?’ என்று விசாரித்தார் அவர்,

‘வந்து விட்டார்; கூப்பிடட்டுமா?” என்றான் அவன். ‘இப்பொழுது வேண்டாம்; அப்புறம் சொல்கிறேன்’ என்றார் அவர்; அவன் போய்விட்டான்.

அதற்குப் பிறகு அவர் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். அந்த யோசனையின் முடிவில்தான் அவனை அழைத்து, ‘இன்று மாலை என்னுடன் வர முடியுமா?’ என்றுக் கேட்டார்; அவனோ பாமாவை