பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 37

அவள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவனுக்குப் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்; அவனும் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளுக்கு முன்னால் ஏறி உட்கார்ந்தான். பரிபூரணமாக அவளை ஏமாற்றிவிட்ட பரம திருப்தியுடன்

தன்னந் தனியனான மணி, அன்றிரவு தான் தங்கி யிருந்த ஒட்டலுக்குத் திரும்பும்போது மணி பத்துக்கு மேல் இருக்கும். ‘ஏன் சார், இன்று இவ்வளவு நேரம்?’ என்று கேட்டான் வாசலில் நின்றுகொண்டிருந்த சர்வர் சங்கர், தன் கையில் புகைந்து கொண்டிருந்த பீடியை அவனைக் கண்டதும் தனக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு. ‘இவ்வளவு பெரிய உலகத்தில் இப்படிக் கேட்க நமக்கு யாருமில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; நீ ஒருவன் இருக்கிறாயா?-மகிழ்ச்சி!’ என்று சொல்லிக் கொண்டே மாடிக்குச் சென்றான் மணி.

‘இந்த வேடிக்கையான உலகத்திலே இவர் ஒரு வேடிக்கையான சார் என்று முணுமுணுத்துக் கொண்டே, தன் கையிலிருந்த பீடியை அவசரம் அவசரமாக இரண்டு இழுப்பு இழுத்து வீசி எறிந்துவிட்டு, ‘என்ன சார், ஏதாவது வேண்டுமா?’ என்று கேட்டுக் கொண்டே அவனைத் தொடர்ந்தான் சங்கர்.

‘ஒன்றும் வேண்டாம்; இந்த நேரத்தில் உனக்குத் தொல்லை கொடுப்பானேன்? என்று வழியிலேயே நான் வயிற்றைக் கவனித்துக் கொண்டு வந்துவிட்டேன். நீ போய்ப் படுத்துக் கொள்!” என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டுத் தன் அறையைத் திறந்து விளக்கைப் போட்டான் மணி.

அந்த அறையின் வாயிலைப் பார்த்தாற்போல் மாட்டி வைக்கப்பட்டிருந்த மோகனின் படம், ஏண்டா, மணி! என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணின் முன்னால்அதிலும் நான் காதலிக்கும் ஒரு பெண்ணின் முன்னால் என்னை நீ அப்படி அவமானப்படுத்தலாமா? நாளைக்கு நான்