பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காதலும்கல்யாணமும்

‘'காதல் காபியா? காதல் இல்லாத காபியா?” என்று கேட்டான் சங்கர், சிரித்துக் கொண்டே

‘அது ஒன்று; இது ஒன்று’ என்றான் மணியும் சிரித்துக் கொண்டே.

‘'சரி!’ என்று.அவன் கையிலிருந்த புத்தகத்தை அங்கிருந்த கட்டிலின் மேல் வைத்துவிட்டுச் செல்ல, ‘ஏண்டா, சங்கர் என்ன புத்தகம், இது?’ என்று கேட்டான் மணி, அதைக் கையால் தொட்டுப் பார்க்கக் கூட விரும்பாதவன் போல.

‘'காதல் இல்லாத புத்தகம்தான், சார் அது இருந்தால் அதை நான் உங்களுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்திருப்பேனா? சுட்டுவிட மாட்டீர்களா, கட்டு!” என்றான் அவன், கீழே இறங்கிக் கொண்டே.

அவன் இறங்குவதைப் பார்த்துக்கொண்டே இருந்த மோகனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, ‘எங்கே போனாலும் உனக்கென்று ஒர் உதவியாளன் ஊதியம் இல்லாமலே வந்து சேர்ந்துவிடுகிறான், இல்லையா?” என்றான், ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவனாக.

‘ஆம்; அந்த விஷயத்தில் மட்டும் எனக்கு எப்போதுமே சிரமம் ஏற்பட்டதில்லை!” என்றான் மணி.

‘உன்னிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி இருக்கிறது; அதுதான் யாரையாவது இழுத்துக்கொண்டு வந்துஉன்னிடம் விட்டுவிடுகிறது!”

‘இருக்கலாம்; ஆனால் சில சமயம் அது பெண்களையும் இழுத்துக்கொண்டு வந்து என்னிடம் விட்டுவிடும்போதுதான் எனக்குத் தர்மசங்கடமாகப் போய்விடுகிறது:

மோகன் சிரித்தான்; சிரித்துவிட்டுக் கேட்டான்:

“இவன் ஒரு மாஜி கேடி என்பது தெரியுமா, உனக்கு?”

மணி சென்னான்; சிரிக்காமலே சொன்னான்: