பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காதலும் கல்யாணமும்

தங்கை பாமாவுக்காக, தம்பி பாலுவுக்காக அவள் என்னமோ கல்யாணம் செய்துகொள்ள விரும்பவில்லைதான். அதற்காக இந்தக் காதல் யுகத்தில் அவளை யாரும் காதலிக்காமல் இருந்துவிடுவார்களா, என்ன?. காதலித்தார்கள், வாலிபர், வயோதிகர் என்ற பேதம் கூட இல்லாமல்

ஆனால் அவர்களில் யாராவது ஒரு புண்ணியாத்மா அவளைக் கல்யாணம் செய்துகொள்ளத் தயாராயிருந்தாரா வென்றால், அதுதான் கிடையாது. காரணம், காதல் அவர்களுக்குப் பொழுது போக்காயிருந்தது போலக் கல்யாணம் பொழுது போக்காயிருக்கவில்லை-எப்படி இருக்க முடியும்? அதில்தான் கடமை என்று ஒன்று வந்து குறுக்கே நின்று தொலைக்கிறதே?

அந்தக் கடமை என்னும் மடமை'க்குத் தன்னைப் பொறுத்த வரை யாரும் அவ்வளவு எளிதில் தங்களை ஆளாக்கிக் கொண்டுவிட மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் ஒரு சபலம், தனக்கென்று ஓர் ஆண் துணை-அது சிங்கமாயிருந்தாலும் சரி, சிறு நரியா யிருந்தாலும் சரி-இருந்தால் தேவலை என்று எப்போதாவது தோன்றும் அவளுக்கு. அப்படித் தோன்றும்போதெல்லாம் அவள் தன் பார்வையை யார் மேலாவது சற்றே செலுத்திப் பார்ப்பாள். அந்தப் பேதையின் பார்வைக்குரியவனோ அவளை மட்டும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பானே தவிர, அவளுக்காக அவள் தங்கையையும், தம்பியையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்க மாட்டான்

அதற்காக அவனைக் குற்றம் சொல்லியும் பிரயோசன மில்லை. நம் நாட்டுப் பொருளாதாரம்தான், ‘கல்யாணம் செய்துகொள்கிறாயா, தாராளமாகச் செய்து கொள் ஆனால் ஒன்று, அளவோடு பிள்ளை பெற்றுக்கொள்-மீறினால் உன் மனைவியின் வயிற்றை அறு; இல்லாவிட்டால் உன்னுடைய இடுப்புக்குக் கீழே கத்திரிக்கோலைப் போடு என்று ஓயாமல் ஒழியாமல் பிரசாரம் செய்யும் அளவுக்கு இப்போது