பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 59

‘என்ன உதவி?” ‘என்னுடைய வீட்டில் எனக்கு நீ நண்பனாயிரு; உன்னுடைய ஒட்டல் அறையில் உனக்கு நான் நண்பனா யிருக்கிறேன். ஆனால், ஆபீசில் மட்டும் எனக்கு நீ விரோதியாயிருக்க வேண்டும்; உனக்கு நான் விரோதியா யிருக்க வேண்டும்-இதுவே என் விண்ணப்பம்’

“எதற்கு? ஏதும் அறியாத அந்தப் பேதைப் பெண்ணை ஏமாற்றுவதற்கா?”

‘இல்லை; ஏமாறாமல் இருப்பதற்கு!” ‘அதில் நீ தவறினால்?” ‘தண்டனை அளிக்கத்தான் நீ இருக்கிறாயே?” “ஞாபகமிருக்கட்டும்; அப்போது நீ வீட்டிலும் சரி, வெளியிலும் சரி-என்னுடைய நண்பனாயிருக்க முடியாது!”

இதைச் சொல்லிக்கொண்டே மணி காபியை எடுத்துக் குடிக்க, மோகனும் அந்த ஒரு விஷயத்திலாவது அவனைப் பின்பற்ற முடிகிறதே என்ற திருப்தியில் தானும் தன் காபியை எடுத்துக் குடித்தான்!

10. உண்மை சிரித்தது!

சோதனைகள் மிகுந்த தன் வாழ்க்கைப் பிரயாணத்தில் முப்பதாவது மைல் கல்லைக் கடந்து கொண்டிருந்த ராதாவுக்குக் கல்யாண அனுபவம் இல்லையென்றாலும், காதல் அனுபவம் வேண்டிய மட்டும் இருந்தது. அந்த அனுபவத்தின் காரணமாகவோ என்னவோ, அவளிடம் யாராவது வந்து காதல் புனிதமானது’ என்று சொன்னால் போதும்; அவள் உடனே மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒடிப் போய்விடுவாள்-ஆம், அவளைப் பொறுத்தவரை அது அத்தனை நாற்றமெடுத்துப் போயிருந்தது