பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 77

அதற்குமேல் அவனைச் சோதிக்க விரும்பாமல், ‘ஆமாம், நீ அந்த அண்ணியை எப்போது தேடிப் பிடித்தாய்?’ என்று கேட்டாள் அவள்.

‘இப்போதுதான்!” என்றான் அவன். ‘அந்த அண்ணியின் அக்கா எங்கள் பேராசிரியை வீட்டுச் சமையற்காரி என்பது தெரியுமா, உனக்கு?”

‘தெரியும்’ ‘தெரிந்துதான் நீ அந்த அண்ணியைக் காதலித்தாயா?” “ஆமாம்!” “அப்படியானால் உன்னைக் காதல் மன்னன் என்று மட்டும் சொன்னால் போதாது; காதல் வள்ளல்” என்றும் சொல்லத்தான் வேண்டும்!”

‘சொல்லு உன்னைப் பொறுத்தவரை நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு ஆனால் அப்பா, அம்மாவிடம் மட்டும் அந்த அண்ணியைப் பற்றிச் சொல்லிவிடாதே!’

‘அதிகச் செலவாகுமே, அதற்கு சமாளிப்பாயா, நீ?” ‘முடிந்தவரை சமாளிக்கிறேன்” ‘அப்படியானால் நானும் முடிந்தவரை சொல்லாமலி ருக்கிறேன்!”

இருவரும் சேர்ந்தாற்போல் இந்த முடிவுக்கு வந்தபோது ‘'சார், சார்’ என்று ஒரு குரல் வாசலிலிருந்து வந்தது; அருணா வெளியே வந்து பார்த்தாள்-பார்ப்பதற்குப் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை போலிருந்த பிக்-பாக்கெட் பீதாம்பரம் சுற்றுமுற்றும் பார்த்தபடி அங்கே நின்று கொண்டிருந்தான்.

“என்னைத் தெரியவில்லையா? அடிக்கடி இங்கே வந்து கொண்டிருப்பவன்தானேம்மா, நான்?” என்றான் அவன்.

“எத்தனையோ பேர் வருகிறார்கள்; எத்தனையோ பேர் போகிறார்கள். அவர்களில் உன்னை யார் என்று தெரியும், எனக்கு?"