பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 83

‘'நானா வேண்டாமென்றேன், அவர்தான் சொல்ல வில்லை!”

‘போடி, போ! இப்போது நான் அவர்களுடைய முகத்தில் எப்படி விழிப்பேன்? என்னுடைய முகத்தில் கரியைப் பூசியது போதாதென்று, அவர்களுடைய முகத்திலுமல்லவா நீ கரியைப் பூசிவிட்டாய்?”

அப்போது, ‘யாரும் யாருடைய முகத்திலும் கரியைப் பூசிவிடவில்லை; இப்போது என்னைப் பார்ப்பதற்காக இங்கே வந்திருந்தாளே ஒருத்தி, அவள் அவனுடைய தங்கையாம்-அவளைப் பார்த்ததும் அவன் கம்பி நீட்டிவிட்டிருக்கிறான்; நடந்தது அவ்வளவுதான்’ என்றாள், அங்கே வந்த மீனாட்சியம்மாள்.

‘யார் அம்மா, அது? நான் இந்தத் தரை விரிப்பை எடுத்துக்கொண்டு வரும்போது, ‘அம்மா இருக்கிறார்களா?” என்று கேட்டுக்கொண்டு வந்ததே ஒரு பெண், அதுவா?” என்று கேட்டாள் ராதா.

“ஆமாம், அவளேதான்’ என்றாள் அவள். ‘தங்கையிடம் அவ்வளவு பயமா, அவருக்கு?” ‘பயம் தங்கையிடம் இருக்குமென்றுத் தோன்ற வில்லை; தன்னைப் பெற்றவர்களிடம் இருக்கும் போலிருக்கிறது, அவனுக்கு’

‘அதற்காக?” “அவள் போய் அவர்களிடம் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து ஒடிப்போயிருப்பான், அவன் ஏண்டி பாமா, அப்படித்தானே?’ என்றாள் மீனாட்சியம்மாள், பாமாவின் பக்கம் திரும்பி.

‘அது என்னமோ, எனக்குத் தெரியாது’ என்றாள் அவள், கையைப் பிசைந்துகொண்டே

அதற்குள் எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபடி ராதா சொன்னாள்: