உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சிச் சோத்திலே என்ன இருக்குங்கறே சத்து? சோளம் சாப்பிட்டா, கஷ்டப்பட்டு வேலை செய்ய வலிவு ஏற்படும்....

சம்:— (சலிப்பாக) அது சரிங்க...

ச:— கஞ்சி காய்ச்சிச் சாப்பிடறதா, களியாக்கித் தின்றதா— சோளத்தை...

சம்:— அப்படி ஒருவேளை, இப்படி ஒரு வேளை..

ச:— ருசியாக்கூட இருக்கும்னு சொல்றா... நான் சாப்பிட்டதில்லை...

சம்:— (கேலியாக) உங்க உடம்புக்கு ஒத்துக்காதுங்க... பெருங்காயம், லால்ஜி கம்பெனி பெருங்காயம்ங்களா...

ச:— (அலட்சியமாக) ஏதோ ஒரு கம்பெனி... எதுவானா என்ன... என்னமோ ஒரு பழக்கம்.. சாம்பார்லே பெருங்காயம் போட்டாத்தான் எனக்குப் பிடிக்கும்..அப்படி ஒரு அசட்டுப் பழக்கமாயிடுத்து.

சம்:— (மேலும் கேலியாக) இதுக்கு அதெல்லாம் தேவை இல்லிங்க..

ச:— (முறைத்தபடி) ஏண்டா? உன் பேச்சிலே திமிர் இருக்கு...கேலியா பேசறே...இப்பப் போனானே பொன்னன் யார் தெரியுமோ...?

சம்:— தெரியுங்களே.. போக்கிரி! செவனேன்னு போய்க்கிட்டு இருந்த என்னை, இப்பத்தானே கல்லாலே அடிச்சான்...கண்டபடி பேசினான். ஓடியிருக்கான் இப்ப, உங்களுக்குக் காயம் வாங்கிவர. உங்க யோகம் அப்படி இருக்கு...எங்க பிழைப்பு (மூட்டையைக் காட்டி) இப்படி இருக்கு.. (பெருமூச்செறிந்தபடி) என்னா செய்றது. விதி நமக்கு அப்படி...

(போகிறான்)
(அவன் போன திக்கில் வெறுப்புடன் பார்க்கிறார் ஐயர் முணுமுணுத்துவடி)
(எதிர்ப்புறமிருந்து தாண்டவராயன் வருகிறான்)