உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

இருந்தது. உன் காதல், பட்டணத்துக் காதலாச்சே—பீச்சு, சினிமா, டான்சு, கடிதம் இப்படி இருந்திருக்கும். நீ, சோல்ஜர்! உனக்குச் சேர்ந்த ஜோடி, டாக்டர். கேட்க வேணுமா—உங்க காதல் கதையே, தனி தினுசாத்தான் இருந்திருக்கும். ஏன், தங்கவேலு, அப்படித்தானே...அட, சொல்லேன்... இப்ப நான் சொல்லலியா விவரமா, எங்க பட்டிக்காட்டுக் காதலை... அதுபோல உங்க பட்டணத்துக் காதலைக் கொஞ்சம் சொல்லேன்—அது, எப்படி இருக்குன்னு பார்ப்போம்... வெட்கமா...இதிலே என்னப்பா வெட்கம்... நீ, கேட்டிருந்தா, நான் இன்னம் விவரமாக்கூடச் சொல்லுவேன், எங்க காதலை...

த:— என் கதையையா கேட்கிறாய், பொன்னா! பட்டிக்காடு பட்டணக்கரை எதுவாக இருந்தாலும், இந்தக் காதல் விவகாரம் ஒரே தினுசாத்தானேப்பா இருக்கும்...

பொ:— இந்த ‘நைஸ்’ பேச்சு வேணாம்—சொல்ல இஷ்டமில்லேன்னு சொல்லேன்—நீ சோல்ஜராச்சே, உன் காதல் கதை, கோட்டையைத் தாக்கி, படையை விரட்டி, பிற்பாடு அந்தப்புரத்துக்குள்ளே போயி, பொண்ணைத் தூக்கிட்டு வெளியே வந்து, பஞ்ச கல்யாணி குதிரைமேலே ஏத்திக்கிட்டு, காத்தாப் பறந்து வாரதா இருக்கு போலிருக்கு.

த:— (புன்னகை செய்து) பொன்னா! ஒரே அடியாக் கிண்டல் செய்யறியே... கோட்டை கொத்தளம் குறுக்கிடலே என் காதல் விவகாரத்திலே......

பொ:— குறுக்கிட நினைச்ச கொடும்பாவியைத்தான் நான் சரிப்படுத்தியாச்சே— இனி என்ன; ஜெயம்தான் உன்பாடு......

“லாலீ, லாலீ, சுப லாலீ லாலீ"

(கேலியாகப் பாடுகிறான்)

த:— (சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு) சொல்ல வேணும்னு எனக்கும் தோணுது பொன்னா! கேள் என்