136
கதையை... நான் பட்டாளத்திலே சேரும் போதே கொஞ்சம் படிச்சவன் தான் ...அங்கே போய், மேலும் கொஞ்சம் உலக விவகாரத்தை அறிய முடிஞ்சுது... ஓய்வு கிடைக்கிறபோதெல்லாம், படிப்புதான்... பட்டாளத்தைக் கலைக்கிற போது எனக்கும் சீட்டு கொடுத்து விடலே—மேலதிகாரி என்னை ரொம்பச் சிபார்சு செய்ததாலே, அழகூரிலே சிப்பாய்களுக்கு உதவி செய்கிற சங்கத்திலே எனக்கு நல்ல உத்தியோகம் கிடைச்சுது—சண்டையிலே ஈடுபட்டு, கைபோய், கால்போய், கண்ணைண இழந்து கஷ்டப்படுகிறவங்களெல்லாம் உண்டு தெரியுமில்லோ, அவங்களுக்கு உபகாரம் செய்ய அந்தச் சங்கம். அதிலே வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்...
பொ:— ஓஹோ புரியுது, புரியுது, உள் ஜோடி அங்கே டாக்டரா வேலை பார்த்துதா?
த:— இல்லே, பொன்னா? இல்லே!
பொ:— சொல்லு, தங்கவேலு, சொல்லு...முத முதல் எங்கே பார்த்தே? எப்படி?
த:— முதமுதல் பார்த்ததா..! வேடிக்கையாத்தான் இருக்கும் அது...... கேளு சிப்பாய்களோட உதவிக்குத் தானே சங்கம்... அதிலே தான் எனக்கு வேலை.. அந்தச் சங்கத்துப் பெரிய அதிகாரி, சங்கத்துக்குப் பணம் சேர்க்க, ஒரு நாடகம் போடவேணும்னு சொன்னார்...
பொ:— யாரை? உன்னையா?... என்னா நாடகம்...
த:— எதுவா இருந்தா என்னா சங்கத்துக்குப் பணம் வேணும்...சரின்னு, என்னோட சினேகிதர்களைக் கொண்டு நாடகம் தயார் செய்தேன்...
பொ:— பலே, நாடகத்திலே டாக்டரய்மா வர, நீ அவங்களைப் பார்க்க, அவங்க உன்னைப் பார்க்க, அப்படியே காதல் வளர்ந்தது...
த:— இல்லே, பொன்னா! இல்லே! நாடகம் ஏற்பாடாச்சா...அதிலே ஒரு டான்சு...
பொ:— டான்சு வேறேயா...!
த:— ஆமாம்—டான்சுக்கு மட்டும் யாராவது ஒரு பொண்ணு வேணும், இருவதோ முப்பதோ கொடுத்துடலாம்னு