உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

ஒருத்தி டான்சு ஆடுவா. அங்கே வந்து சேர்ந்தேன்—ஒரு வருஷத்துக்குப் பிறகு, அவர் திரும்பிவந்தார்...

தங்:— வந்து...

பெண்:— வாய்க்கு வந்தபடி திட்டினாரே தவிர, தனக்குப்பிறந்த செல்வத்தை வாரி அணைத்துக்கொள்ளவில்லை...வாடி பட்டு! ஊருக்குப் போவோம், ஊரைக் கூட்டிவைத்து, நான் உன் புருஷன், என்று சொல்லிப் பழி பேசினவங்க வாயை அடைக்கிறேன்னு சொல்லவில்லை—நானாகத் தேடிக்கொண்டு ஓடினேன்— ஊர்க் கோடியிலேயே தடுத்து நிறுத்தி, இந்த நிலையிலே ஊருக்குள்ளே வராதே, மானக்கேடு எனக்கு என்று பேசினார்...

தங்:— படுபாவி!

பெண்:— நானும்தான் அண்ணேன், படுபாவி, பழிகாரா, என்னை மோசம் செய்யலாமான்னு சுடச்சுட கேட்டேன்—சோல்ஜர் அல்லவா! சாகடிக்கிற வேலைதானே... நான் அழ அழ அவர் சிரித்தார் — என்னைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். உமது காதல் விளைவு இதோ என்று குழந்தையைக் காட்டினேன்—ஆணவத்தோடு, அக்ரமக்காரன், ஸ்டாம்பா ஒட்டியிருக்கு பைத்தியக்காரி! ஊர்லே உலகத்திலே நம்பத்தான் செய்வாங்களா? பட்டாளத்துக்குப் போறபோதே பட்டு கர்ப்பம், இவன் தான் குழந்தையோட தகப்பன் என்று சொல்லுமா! கேவலமாப்பேசும்!... என்றான்... ஊர் ஆயிரம் சொல்லட்டும், உனக்குத் தெரியாதா...உன் உள்ளம் சொல்லாதா என்று கேட்டேன்—அண்னா அந்தக் காதகன், என்ன சொன்னான் தெரியுமா?

(அழுகிறாள்)

தங்:— (கண்களைத் துடைத்தபடி) அழாதேம்மா...அழாதே..என்ன சொன்னான் அந்த மிருகம்...

பெண்:— என் குழந்தை என்று நான் மட்டும் எப்படி நம்ப முடியும் — நம்ம கிராமத்திலே நான் ஒருவன்தானா ஆண் பிள்ளைன்னு கேட்டான் — அண்ணா! என்னைக் கெடுத்தவன் ஈட்டியாலே குத்தினான் என் இருதயத்தை! என்னைக்