18
ச:— பார்த்தயோ அந்தக் கோரத்தை! இந்தக் காலத்திலே இன்ப்ளுயன்சாவாம், டைபாயிட்டாம், நிமோனியாவாம், ஏதேதோ பேர் சொல்றா ஜூரத்துக்கு— அந்தக் காலத்திலே இப்படிப்பட்ட பேர்களைக் காதாலே கேட்டதுகூடக் கிடையாது.. எல்லாரும் இப்ப மேதாவிகளாயிட்டா...அதுக்கென்ன காரணம், இதுக்கென்ன அர்த்தம்னு கேட்கறா, பெரிய ஞானஸ்தாளாட்டம்...
வே:— அன்யாயம் நடக்குது சாமீ ! நேத்து ஒரு பய, என்கிட்டச் சொல்றான், இராவணனுக்குப் பத்து தலை கிடையாதுன்னு...
ச:— காலம் கெடாமலிருக்குமோ... உலகமே நாசமாயிண்டு வரது...
வே:— தம்பி! நில்லப்பா. சாமி! யாரு தெரியுதா? நம்ம சாது சம்மந்தன் மகன்!
ச:— ஓஹோ! பட்டாளத்திலே இருக்கானா? ரொம்பச் சந்தோஷம். வாப்பா, என்னென்ன தேசம் போயிருந்தே?
சி:— நானுங்களா! பர்மா, பினாங்கு, கிரீஸ், இட்டாலி, எல்லாந்தான்.
க:— உலகமே சுத்திவிட்டேன்னு சொல்லு.
வே:— எல்லாம் ஒரு ஜாண் வயதுக்குத்தானே...
சி:— எல்லோரும் அப்படித்தான். எந்த வேலையும் அதுக்காகத்தானே...
ச:— சண்டை பிரமாதமா இருந்ததோ?
சி:— அதை ஏன் கேக்கறிங்க போங்க! (நடிப்புடன்) ஏரோப்ளேன், விர்ருன்னு வரும்...
ச:— மேலே...
சி:— ஆமாம், பறந்துதானே வரும்... சத்தம் கேட்டதும் கப்சிப், நாங்க சந்தடியே செய்யாமே, குழியிலே போய்