உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

சி:— அண்ணேன் — அண்ணேன் — வரட்டும்டா அவரு—உன் கதி என்னா ஆகுதுன்னு பாரு... அண்ணே...

(உட்புறமிருந்து பொன்னன் வருகிறான்)

அண்ணேன்—இதோ பாரண்ணேன் எவனோ கிறுக்கன் — மட்டு மரியாதை இல்லாம, பேரிட்டுக் கூப்பிடுகிறான்.

(பொன்னன் பக்கிரியைப் பார்த்ததும் தலையைச் சொரிந்தபடி)

பொ:— அடடே! பக்கிரியா?..வா, தம்பீ! (சீடனைப் பார்த்து) டேய் சின்னா! உள்ளே போய் இரு (அவன் போனபிறகு பக்கிரி — எப்ப வந்தே? ஏதாவது நாடகம் இருக்கா இந்தப் பக்கம்.

ப:— (கோபமாக) ஆமாம்—இந்த ஊர்லேதான் நாடகம்— இன்னக்கித்தான்—சூரசம்மாரம்...

பொ:— சூரசம்மார நாடகமா... ராத்திரி பத்துக்கு ஆரம்பமாகுமா...?

ப:— ராத்திரிக்கா! இப்பவே ஆரம்பமாகுது...

பொ:— என்னடா, பக்கிரீ!—ஏதோ ஒரு மாதிரியாப் பேசறே...

ப:— (கேலியாக) ஐய்யோ. பாவம் — எதாச்சும் தெரியுமா உனக்கு — பால்மணம் மாறாத பாலகனில்லே.... படுபாவி!... என் குடும்பத்தைக் கெடுக்கவாடா, ஆடு வாங்கறேன் ஆடு வாங்கறேன்னு வந்து குலவினே—டே! பழி பாவத்துக்கு அஞ்சாத ஜென்மம், மனுஷ ஜென்மந்தானா— ஊரை மிரட்டிக்கிட்டு, இளைச்சவனை அடிச்சிகிட்டு, ஏமாந்தவன் கிட்டே பொருளைப் பறிச்சிகிட்டு இருக்கறே—அது போதாதுன்னு...

பொ:— பக்கிரி— பதறாம் பேசு... நான் கொஞ்சம் முன் கோவக்காரன் — நிதானமாகப் பேசு...

ப:— கோபமாப் பேசினா, என்னடா செய்துடுவே—கொலை செய்வாயா — செய்யி— நீ, என் குடும்பத்துக்கு செய்தி-