35
ருக்கிற கொடுமையை விடவாடா, கொலை, பாவ காரியம்...
பொ:— பக்கிரி—தப்புக் காரியம்தான்—இல்லேன்னு சொல்லலே — என் மனதுக்கே பெரிய சஞ்சலம்—அதனாலே தான் இவ்வளவு பொறுமையா இருக்கிறேன்...
ப:— (கேவியாக) ஐய்யோ...இல்லென்னா தலையைச் சீவி விடுவே... பொன்னா! நீ இந்த ஊருக்கே பெரிய போக்கிரியா இருக்கலாம் — ஆனா—இந்தப் பக்கிரி மனதிலே மூண்டு இருக்கிற ஆத்திரம் இருக்கே—சாமான்யமில்லே...உன்னைக் கசக்கிப் பிழிந்துவிடுகிற பலம் இருக்கு, எனக்கு—உன்னுடைய அக்ரமம், என்னைப் புலியாக்கிவிட்டதடா பாவி...
பொ:— பக்கிரி! பதறாதே—நான்தான் சொல்றனே—தப்பு என் மேலேதான்னு. நல்ல பருவம், பொன்னிக்கு—பாவம், அது தங்கமானது—நான் தான் பாவி. அதன் மனசைக் கெடுத்து
ப:— எவ்வளவு நிதானமாச் சொல்றே பொன்னா, இந்த நீசத்தனமான காரியத்தை — பெண்களோட மானம் மரியாதை வாழ்வு எல்லாம் கற்பு ஒண்ணாலேதானேடா பாவி, மணக்கோணும், சிறப்படையவேணும் — அந்தக் கற்பைக் கெடுத்து, அவளை விபசாரப் படுகுழியிலே தள்ளிவிட்டு, என்னோடு, கதா காலட்சேபமா செய்யறே...
பொ:— பக்கிரி! பொன்னிக்கு அவமானம் வரக்கூடாது— என் மனம் பதறுது, நான் செய்தூட்ட அக்ரமத்தை எண்ணிக் கொண்டா...
ப:— (கதறி ) ஐஞ்சு மாசமாண்டா, மோசக்காரா? என் குடும்பம், ஊரிலே எப்படிடா இருக்க முடியும்...
பொ:— என்ன செய்யணும் பக்கிரி! போக்கிரி பொன்னன் பேசறதாக எண்ணாதே—வகையில்லாத காரியம் செய்து-