பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

3


ஆதலின்என் ஐம்பொறிக்கும் செயலில்லை;
    மீதமுள்ள ஆவி ஒன்றே
அவதியினாற் சிறுகூண்டிற் பெரும்பறவை
    ஆயிற்றே! "அன்பு செய்தோன்
சாதல்அடைந்தான்" எனும்ஓர் இலக்கியத்தை
    உலகுக்குத் தந்திடாதே!
சடுதியில்வா! பறந்துவா! தகதகென
    முகம்காட்டு! தையலாளே!

காதலி காதலனுக்கு
”பறப்பதற்குச் சிறகில்லை”

காதலா,
    நான் பிழைசெய்தேன்; என் ஆசை
        உன்மனத்தில் கழிந்ததென்று
    கருதினேன்! கடிதத்தைக் கண்டவுடன்
        களிப்புற்றேன்! களிப்பின் பின்போ
    வாதையுற்றேன்! பறப்பதற்குச் சிறகில்லை!
        காற்றைப்போல் வந்தே னில்லை
    வனிதைஇங்கே-நீஅங்கே! இடையில்இரு
        காதங்கள் வாய்த்த தூரம் !
    சாதலுக்குக் காரணம்நான் ஆகேன்
        என் சாகாமருந்தே! செங்கை
    தாங்கென்னை; உன்றன்நெடும் புயத்தினில்நான்
        வீழ்வதற்குத் தாவு கின்றேன்.
    நீதூரம் இருக்கின்றாய் ஓகோகோ
        நினைப்பிழந்தேன் என் துரையே!
    நிறைகாதல் உற்றவரின் கதியிதுவோ!
        என்செய்கேன் நீணிலத்தே!

இன்னும் அவள் வரவில்லை

ங்கையவள் வீட்டினிலே கூடத்துச் சுவரில்!
    மணிப்பொறியின் இருமுள்ளும் பிழைசெயுமோ! மேற்கில்
தங்கத்தை உருக்கிவிட்ட வான்கடலில் பரிதி
    தலைமூழ்க மறந்தானோ! இருள்என்னும் யானை