பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

5


பொற்றொடியாள் எனைத்தழுவித் தழுவிநனி இன்பம்
    புதிதுபுதி தாய்நல்க இன்னும்வர விலையே!

மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும்
    வெந்துநீ றாகாமல் இருப்பதொரு வியப்பே!
நாற்றிசையும் பெருகிவரும் இருட்பெருவெள் ளத்தை
    நடுவிருந்து தடுக்கின்றான் பரிதி; அவன் செய்கை
மாற்றியமைத் திடஏதும் வழியுண்டோ? என்றன்
    மையலினை நான்பொறுக்க ஒருவழியுங் காணேன்.
சேற்றிற்செந் தாமரையாம் இரவில்அவள் தோற்றம்!
    தீயில்எனைக் குளிர்செய்ய இன்னும்வர விலையே!

சொல்லித்தானா
தெரியவேண்டும்

தாயிருக்கையில் தனமிருக்கையில்
சஞ்சல மென்ன மானே—நல்ல
பாயிருக்கையில் புழுதித் தரையில்
படுத்துப் புரளும் தேனே!
வாயிருக்கையில் கேளடி நல்ல
வான நிலவும் கொடுப்பேன்--இன்று
நீயிருக்கிற நிலை சகியேன்
நிலத்தினில் உயிர் விடுப்பேன்.

என்ன குறைச்சல்? எதனில் தாழ்த்தி?
யானை போல அப்பா—நீ
சொன்ன நொடியில் குறை தவிர்ப்பார்!
சொல்லுவதும் தப்பா?
சின்ன இடுப்பு நெளிவ தென்ன
சித்திரப் புழுப் போலே—அடி
கன்னி உனக்குக் கசந்ததுவோ
காய்ச்சிய பசும் பாலே?

அண்ணன்மார்கள் பாண்டியர்கள்
ஆசைக் கொரு தம்பி—அவன்
எண்ண மெல்லாம் உன்னிடத்தில்!
ஏற்ற தங்கக் கம்பி