பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

காதல் நினைவுகள்


குன்றிட வைதனர் சிற்சிலர்!
வையக மீதினில் தாலி யிழந்தவள்
மையல் அடைவது கூடுமோ?
துய்ய மணாளன் இறந்தபின் மற்றவன்
தொட்டதை வைதிகம் ஏற்குமோ?

என்றிவை கூறினர் ஊரினர் யாவரும்!
இங்கிவை கண்டனர் காதலர்.
குன்றினைப் போல நிமிர்ந்தனர்! கண்ஒளி
கூர்ந்தனர்! அச்சம் தவிர்ந்தனர்!
இன்றுள தேசம் புதுத்தேசம் மணம்
எங்களிஷ்டம் எனக் கூறியே
அன்னதோர் ஊஞ்சலை உந்தி உயர்ந்துயர்ந்
தாடினர்; ஊரினர் ஓடினர்!

வாளிக்குத் தப்பிய மான்

ணக்கப் பிள்ளையின்மேல் — அவளோ
        கருத்தை வைத்திருந்தாள்.
மணக்கும் எண்ணத்தினை--அவளோ
        மறைத்து வைத்திருந்தாள்.
பணக்கு வியல்தனைப் — பெரிதாய்ப்
        பார்த்திடும் வையத்திலே,
துணைக்கு நல்லவனின் — பெயரைச்
        சொல்வதும் இல்லைஅவள்.

அழகிய கணக்கன் — உளமோ
        அவள் அழகினிலே
முழுகிய தன்றி — மணக்கும்
        முயற்சி செய்ததில்லை.
புழுதி பட்டிருக்கும் — சித்திரம்
        போல இரண்டுளமும்
அழிவு கொள்ளாமல் — உயிரில்
        ஆழ்ந்து கிடந்தனவாம்.

மணப்பிள்ளை தேடி — அலைந்தே
        மங்கையின் பெற்றோர்கள்