பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் தமிழில் மாண்புறு
கவிதைகள்

முனைவர் ச. மெய்யப்பன்
அண்ணாமலைப்பல்கலைக் கழகம்

40-களில் பாவேந்தர் புகழ் பாரெங்கும் பரவியது. அவர் பாடலைக் கற்று மகிழ்வோர் தொகை நாளுக்குநாள் பெருகியது. விடுதலை வேள்வி வீறுகொண்ட நேரம். தமிழிசையியக்கம் முகிழ்ந்தும் தனித்தமிழ் இயக்கம் செழித்தும் தமிழ்நிலத்தைப் பதப்படுததிபிருந்தன. பாவேந்தரின் கருத்து விதைகள் தமிழ் நிலம் முழுதும் விழுது பரப்பின. பதிப்பாளர்கள் பாவேந்தரின் எழுத்துக்கள் அனைத்தையும் தேட முயன்றனர். தேடலில் கிடைத்த சில பாடல்களின் தொகுப்பே காதல் நினைவுகள். காதல் பாடலைப் பாவேடுதில் தனித்திறம் சான்றவர் பாவேந்தர். காதலர்கள் அடிமனத்தில் சிலிர்த்தெழும் காதல் உணர்வுகளைச் சங்கப் புலவர் போல் பாடும் சால்பினர். புதிய தமிழில் பழந்தமிழ்க் காதல் மரபுகளை இனிக்க இனிக்கப் பாடுவது பாவேந்தரின் இயல்பு. காதல் இயற்கையை, காதலர் வாழ்வை, உள்ளுணர்வுகளை இச்சிறுநூல் பழகுதமிழில் பாட்டோவியமாக்குகிறது

“அழகிருக்கும் அவனிடத்தில் அன்பிருக்கும்
அறிவிருக்கும் செயலிலுயர் நெறியிருக்கும்”
“கலையுலகம் சென்றேன். மயில் போன்றாள் சேயிழையாய் ஆடுகிறாள்!
88னேநாள்!"
நின்றேன்பதிகாடுத்தேன் நெஞ்சு“
“சாதலுக்குக் காரணம் நான் ஆகேன் என் சாகா மருத்தே!"
“முல்லைய-ல - சிரித்தபடி தென்றலிலே சொக்கி,
முன்னடியும் பெயர்க்காமல் இன்னும் இருக்கின்ற
மாலைக்குப் போக்கிடமோ இல்லை“.
“சிங்கக் குழத்தைகளை — இனிய
செந்தமிழ்த் தொண்டர்களைப்
பொங்கும் மகிழ்ச்சியிலே — அங்கமே
பூரிக்க ஈன்றிடுக.“
“திங்களும் செங்கதிரும் எனவே
செழிக்க நல்லாயுள்"
“இங்கெழும் என்வாழ்த்து — மொழிகள்
எய்துக அவ்விருவர்“

இவ்வரிகள் இக்காலத்தில் தமிழ் பெற்றுவரும் நெகிழ்ச்சியினையும் எனிமையினையும் உணர்த்துகின்றன. மக்கள் தமிழாய் மலர்ந்து எல்லோரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் தெருவெலாம் தமிழ் முழக்கம் செழிப்பதையும் உறுதி செய்கின்றன.