பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசன்
வாழ்க்கைக் குறிப்புகள்


1891 — ஏப்பிரல் 29, புதன் இரவு 10-15 மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை தாய் இலக்குமி.

1895 — ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி. இளமையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெறுதல்

1908 — முதுபெரும் புலவர் பு.அ. பெரியசாமியிடமும், பின்னர் புலவர் பங்காரு பக்தரிடமும், தமிழ் இலக்கண— இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கற்றல். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்பறல். புலவர் சுப்புரத்தினத்தை வேணு நாயகர் வீட்டு திருமணத்தில் பாரதியார் காணல். பாரதியாரின் எளிய தமிழ் சுப்புரத்தியாத்தைப் பற்றுதல்

1909 — காரைக்கால் சார்ந்த நிரவியில் அசிரியர் பணி ஏற்றல்.

1918 — பாரதியாரின் சாதி மதம் கருதா, தெளிந்த உறுதியான கருத்துக்களால் ஈப்புற்றுத் தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை தமிழக ஏடுகளில் கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என்ற பெயர்களில், பாடல், காதை, கட்டுரை, மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியார்க்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருத்தல்.

1919 — திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம்சாட்டி 1¼ ஆண்டு சிறை பிடித்த அரசு, விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் கவிஞர் வென்று பணியில் சேர்தல்.

1920 — இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல். புவனகிரியைச் சேர்ந்த பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையைத் திருமணம் செய்தல்.

1921 — பாரதியார் மறைவு (12-9-21)

1926 — ஸ்ரீமயிலம் சுப்ரமணியர் துதியமுது நூலை இயற்றல்.