பக்கம்:காதல் மாயை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்தென்றல் மாரிமுத்து தன் மனேவி செல்லத்திடம் புதிதாகசி சேர்த்திருக்கும் பையனேப்பற்றி இரண்டொரு வார்த்தை களில் விஷயத்தை விளக்கி வைத்தான். ஒண்டிக்கை யாக எவ்வளவு நாள் கடையைக் கண்ணில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கண்காணிக்க முடியும்’ என்று சதா எ.சி சரித்து வந்த செல்லத்துக்குப் புதிதாக ரத்தினத்தை வேலைக்குச் சேர்த்துக் கொண்டது எவ்வளவோ ஆறுத லாகப படடது. நாட்கள் காலச் சுழலில் தேய்ந்தன. பொடியன் ரத் தினம் மீதிருக்கும் நல்ல அபிப்பிராயம் தம்பதிகள் இருவ ராலும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த சில நாட்கள் கழித்து மாரிமுத்து பெட்டிக்கடைச் சாவி யையும் பையனிடமே ஒப்படைத்தான். ரத்தினம் கல்லா" வில் அமர்ந்துகொண்டான். அன்ருட வரவு செலவுக் கணக்கை முதலாளியிடம் சரி பார்த்து ஒப்படைக்க வேண் டியது அவன் பொறுப்பு. ஏகதேசங்களில் கடையை செக்' செய்ய வந்து போவான் மாரிமுத்து, பயல் ரொம்ப சூடிகை!" என்று தன் சகபாடிகள் ரத்தினத்தை உயர்த்திக் கூறும்போதெல் லாம் மாரிமுத்துவின் மனம் மகிழ்ச்சி யடையும் . மாரிமுத்துவும் அவன் மனேவியுமாக இருந்த அந்தக் குடும்பத்தில் ரத்தினமும் ஒருவகைவே கருதப்பட்டான். நாளாவட்டத்தில் இனமறியர்ப் பாந்தவ்யம் ரத்தினத்தின் மீது காந்தம்போல ஆரோகணித்திருப்பதை மாரிமுத்து நன்கு உணர்ந்திருந்தான். அதேமாதிரி செல்லத்துக்கும் பையன்மேல் அலாதியான வாஞ்சை. தன் விட்டு வேலைக் காரப் பையன் என்றநினைவே அவளுக்கு இல்லை. ஒருக்கால் 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/51&oldid=789127" இலிருந்து மீள்விக்கப்பட்டது