பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

கரும்பிலே முத்தீனும் கட்டழகன் காவலிலே. அரும்பும் குலையாது அப்படியே பூத்துநிற்கும். அட்டம் சுளியாது அசல்காற் றடிக்காது. சிட்டுப் பறவாது சேப்பிளேயான் காவலிலே. பட்சி பறவாது பொன்னிளையான் காவலிலே. ஆட்சி பெருகிவரும் அய்யருட சீமையிலே. நித்த மகிழ்ந்திருக்கும் முத்திளேயான் காவலிலே. சுத்த மிகப்பெருகும் தேவரீர் காவலிலே. சத்திய வாசகமாய் தழைத்து மிகப்பெருகும் கொத்தரளிப் பூவின் கொடியும் வதங்காது. கற்பூர தீபம் கலந்து மிகவெரியும். இப்படியாக இருக்குமையா என் காவல். 'பெற்றவரைப் பேயாக்கும்” பிள்ளையென்ற வாதுபோல் கற்றவரைத் தான்பழிக்கும் கசடரென்ற வாய்

மொழியோ

வளர்த்தவரை வாயழிக்கும் மைந்தரென்ற வாருதியோ தழைந்தபுகழ் மன்னவரே சாற்றுகிறேன் கேளுமினி பிள்ளை மனதுதனைப் பெற்ருேர்கள் தானறியார். கள்ளவிழி மாதர்மனம் கண்டறியப் போகாது மைந்தன் மனதுதனை வளர்த்தோர்கள் தாமறியார். அந்தமுள பெண் மனதை அறியவே போகாது படிமேல் சிறையதுதான் பற்றி அவனெடுத்தால் அடியேன் அறிவேனே அப்படியே அவனெடுத்தால் ஊருக்காகாத பிள்ளை உகந்துபெற்ற பேர்க்காமோ ஆருக்கும் ஆகாதாம் அவன்செய்த குற்றமதை

உண்டெனவே பண்ணிவைத்தால் உகந்தடியேன் கூட

நின்று இன்றுயிர்த் தூண்டியிலே ஏற்றிவைக்க நான் வாரேன்

சேப்பிளை விருத்தம்

மண்டலத் தரச ரெக்லாம்

வந்துன் சமுகம் தன்னில் தெண்டனிட் டுனது கீர்த்தி

செயலுடன் கூறுங் கோவே.