பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடியே அலைந்தேன் நானுன்னத் தேடி

உலைமெழுகாய் உருகினேன் வாடி வாடி

பாடியே உன்பெருமை கொண்டுயானும்

பகலிரவாய் வணங்கினேன். பரனே கேளாய்

கூடியே மாலையுடன் பாருக் குள்ளே

குடியிருந்தால் உனக்கான என்னுல் ஆமோ

நாடியே உன்பாதம் கண்ட பேர்க்கு

நடந்தோடி நல்வசனம் நவிலு வாயே.

பாரினில் உந்தனடியைக் கண்டு பட்சமானேன் பயங்கரங்கள் விண்டேனப் பாயா னுமினி

பாரில்யானும் ஆரியப்பன் ஆக்கினைக்குப் பயந்து அலைந்தேனப்பா ஒரு வாரம் உன்னேத் தேடி

வீரியமாய் மா லயுடன் பாருக்குள் நீயும்

வீற்றிருந்தால் உனக்கான என்னுல் ஆமோ.

ஆரியனே இவ்வேளை என்னைக் காக்க

அடியவர்க்கு முன்தோன்றி அருளு வாயே.

கச்சியுமை பங்காள் ஈன்றருளும்

மைந்தனே காத்தவனே நீவருகவே

பச்சைமலை பதிகொண்ட பார்வதியாள் பெற்றிடும் பரிமளம் நீவருகவே

பாரேழு லோகமும் தானடிமை

கொண்டதொரு பரிமளம் வருகவே

உலகமதிலே இப்பக் கலிகால

தேசிகா உத்தமனே நீவருகவே

இச்சையுடன் என்மனதில் எந்நாளும்

குடியான இலங்குகலி யுகவாணனே

இப்போது என்னுடைய இடர்தனத் தீர்க்கவே எதிரே நீ வருகுவாயே.

நாட்டுப்பாடல்

பாலன்தனை நினைந்து பார்காக்கும் சேப்பிளையான்

بہب...

சீலன்தனை நினைந்து திகைத்துப் புலம்புகிருன்