பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

எடச்சிகள் சேலையெலாம் எடுத்து மரமேறி

கடைக்கண்ணால் பார்த்திருந்தார் கன்னியர்

மேலாசையதால்
வர்ணமுள்ள மாயவனார் வாழும் இடைச்சியுடன்
வெண்ணெய் தேடியுண்டு மேவிப் புணரலையோ.
பார்த்தனும் சுபத்திரையாள் பாங்கில் கலந்திருக்க
வேத்துமையாய் அல்லியரைக் கலந்து புணரலையோ,
சாதனமாய்க் கண்ணகியும் தானிருக்கக் கோவலனார்
மாதவியைக் கூடி மருவிப் புணரலையோ,
கானத் தவசிருக்கும் கெளசிகரும் ::ஆசையதால் மேனகையைக் கூடி மேவிப் புனரலையோ,
வருந்தும் வசிஷ்டரிஷி வையகத்திலெப் போதும்
அருந்ததிப் பெண்ணாளை அணைந்து கலரலையோ,
முன்னும் சில பெரியோர்கள் மும்மூர்த்தி முதலாய்
வர்ண மற்ற பெண்களுடன் மருவிப் புணரலையோ.

இவ்வாறு கூறியதும் அரசன் மனம் மாறி அவனைக் கழுவேற்றாமல் விட்டுவிட எண்ணி அவ்வாறே கூறினான். ஆனல் காத்தவராயன் தன்னைக் கழுவேற்றத்தான் வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறான்

இதற்குக்காரணம் கழுவேற்றப்பட்டது, ஒர் உண்மை. இதனைக் கதையில் மாற்ற முடியாது. காத்தவராயனது விவாதத்தில் உண்மையிருக்கிறது. அதனைக் கேட்ட அரசன் மனம் மாறினன். ஆனா

ல் கழுவேற்ற ஒரு காரணம் வேண்டும். இல்லாவிட்டால் இங்கேயே கதை முடிந்துபோகும். எனவே கதையை இங்கு நீட்ட வேண்டியிறுகிறது.

இதற்காகக் காத்தவராயனது முற்பிறப்பிலிருந்து கதையை மறுபடி பாடல் தொடங்குகிறது. முற்பிறப்பில் அவன் கைலாயத்தில் இருந்ததாகவும் அங்கு அவன் ஆறு தேவமாதரைக்கண்டு ஆசை கொண்டதாகவும். பூமியில் பிறந்து அவர்களை மணந்து, கழுவேறிச் சாகவேண்டுமேன்று கைலைவாசன் சபித்ததாகவும் அச்சாபமேற்கொண்டே அவன் உலகில் வந்ததாகவும் கதை கூறுகிறது.

இக்கதை சுந்தரமூர்த்தி நாயனார் கதையை ஒத்திருப்பதைக் காணலாம். அது மிக முந்திய கதை. அக்கதையைத்தான் இது பின்பற்றியிருக்கிறது. மேலும் வேறு சாதிகளுக்குள் கலப்பு மணம்