14 ஆறக் கரமனுவை யையோ வறிந்துரையேன் மாறக் கரவெல்லா மனந்திருத்த மாட்டாதேன் தேறத் தெருளில்லேன் சீர்க்காந்த மலையுடையாய் சீறக் கரவேலோய் சிலம்பேனும் காட்டாயோ? 52. எத்தனையோ வெண்ணமெலா மெண்ணியிருந் தேயுழன்றேன் பித்தனையே போன்மயங்கிப் பேதுறுவேன் மயல்தீரக் கத்தவண்ட ரறைபொழில்சூழ் காந்தமலை வேலா நீ இத்தருண மெளியேற்குன் இடையேனும் காட்டாயோ? 53. பிறதெய்வத் தாற்பயனென் பேதைமனங் காணவிலை சிறுமைதவிர் சீர்த்தியென்பாற் சேர்ந்ததிலை யாயினுநின் உறுபுகழார் காந்தமலை உற்றடைந்தேன் வேலாநின் மறுவற்ற விடையிலுடை மணியேனுங் காட்டாயோ? 54. மாயையிருண் மூட மதிமயங்கித் திரிவேனை மேயவறி வாம்கதிரால் விகற்பமறச் சாந்தமுறத் தூயவின்பம் வரக்காந்தச் சுரும்புடையாய் அளித்திலையே ஓய்கிலாச் சீரிடையி லுடையேனுங் காட்டாயோ? 55. அன்புடைய னாகவெனை யருளகிலாய் அன்பரிடைத் துன்புடையச் சேர்க்ககிலாய் தூமணியே மோகைநகர் தன்புடையார் காந்தமலைத் தருவனையாய் மலையெனவே வன்புடைய பூணணியு மார்பேனுங் காட்டாயோ? பங்கமுறும் புன்மலத்தே பாவியேன் வீழவுநீ வ 56. இங்கடியா னென்றெடுத்தே யின்னருள்செய்யாவிடினும் மங்குறவழ் காந்தமலை வாழ்ந்தருள்வோய் காந்தளணி துங்கமுறும் பன்னிரண்டு தோளேனுங் காட்டாயோ? 57.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/16
தோற்றம்