13 வேனலெலா மின்பயர்ந்து மேன்மழையிற் றுன்புற்றும் கானகல மோவாக் கருங்குயிலே காந்தமலைக் கோனெமையா ளுங்குமரன் கூர்வேற் கரத்தமலன் ஞானவுரு வாயவனை நாடிவரக் கூவாயோ? கூடினவர் கட்கமுதாங் குரலெழுப்பும் பூங்குயிலே நாடினவர்க் கெல்லா நலமு மருள்குமரன் வாடியவென் மலமெல்லா மாயவடர்க் குங்காந்தப் பீடுறுமா மலையானைப் பேணுபுநீ கூவாயோ? 46 47 பிள்ளைக் குயிலே பிறர்வருத்தம் நோனாத உள்ளத்தார்க் கென்று முறவனை மாக்கருணை வெள்ளத்தான் றன்னை விளங்குபொழிற் காந்தமலைக் குள்ளுற்ற கோவை யுவகையுறக் கூவாயோ? 48. சீறலகால் மாந்தளிரைக் கோதிச் சிறந்தவிசை வீறுகுர லையெழுப்பும் வென்றிக் குயிற்பிள்ளாய் ஊறுமறி வாமுருவன் உயர்காந்த மாமலைவாழ் ஆறுமுகன் றன்னைவா வன்புடனே கூவாயோ? 49. குயிற்பிள்ளா யுன்னைக் குறித்தே தொழுகின்றேன் வெயிற்கமையு மேனியுடை வித்தகன்காந் தக்குன்றான் மயிற்பரியா னெங்கள் மலமறுக்கும் பெருவள்ளல் அயிற்கரத்தான் வருமாறே யார்வமொடுங் கூவாயோ? 50. மண்ணாளும் பிறவியெலாம் வாய்ந்துனையான் எள்ளளவும் எண்ணேனே யாயிடினு மின்றே யிரங்குகின்றேன் கண்ணே கருத்தேசீர்க் காந்தமலை வாழ்ந்தருளும் திண்ணாரும் மணிவேலாய் சேவடிநீ காட்டாயோ? 51.
பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/15
Appearance