உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காந்தமலை முருகன் தோத்திர மஞ்சரி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வண்மை மலி திருக்கரத்து வேலன் றன்னை வள்ளிபடர் கற்பகத்தை மனத்தே தோன்றும் திண்மையறி வானானைச் செவ்வே டன்னைச் சீர்க்காந்த மலையிலங்கக் கண்டேன் நானே. 148. உள்ளத்தி லேமுருகை யுணர வேண்டின் உளக்கொன்று சொல்வன் கேள் பேதை நெஞ்சே கள்ளத்தை யறவொழிப்பாய் காந்தக் குன்றம் கண்டுவலஞ் செய்திறைஞ்சிக் கோயில் புக்கு மெள்ளத்தன் னதுதானென் றிருக்குங் கொள்கை வீசியெறிந் திறைவாவெம் கந்தா ஓலம் கொள்ளத்தா வென்னையெனக் குறித்து நின்று கூத்தாடிப் பலபிதற்றிக் கும்பி டாயே. 149. நான்முகனாய்த் திருமாலாய்ச் சிவனே யாகி நானிலமாய் நீராகி அங்கி யாகித் தேன்முகந்த பொழில்வீசுங் காலே யாகிச் சீர்சான்ற வெளியாகிக் கதிரோ னாகி வான்முகந்த மதியாகி யாவு மாகி மாமலையாய் மலைத்தலைமை பூண்டோ னாகி ஊன்முகந்த பிறவிதவிர் மருந்தே யாகி உற்றவனைக் காந்தமலை யினிற்கண் டேனே. 150 ஆறுமுக மாறுமுக மென்பார்க் கங்கே அஞ்சுமுகந் தீர்த்தருளு மையன் றன்னைக் கூறுமுகம் யாவுநிலை பெற்றான் றன்னைக் குஞ்சரியைக் குறமகளைக் கூடி னானை.