பக்கம்:காந்திமதியம்மை பேரில் கலித்துறை அந்தாதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை அந்தாதி அழகிய சொக் 15 நாத பிள்ளை தமது தந்தையாரிடம் தமிழ் கற்றதோடு, ஆங்கிலமும் கற்றுக் கொண்டதாகவும், தமது? தந்தை காலமான பின்னர் தமது பள்ளிப் படிப்பை விடுத்து. தாமே, சிறிது காலம் தமிழ்த் தொடக்கப் பள்ளி ஆசிரிய ராகப் பணியாற்றி வந்ததாகவும் மேற்கூறிய 'வாழ்க்கை வரலாறு' கூறுகிறது, இதன்பின்னர் அவர் , திருநெல்வேலி - முனிசீப் கோர்ட்டில் எழுத்தராகப் (காப்பிஸ்ட்) பணியாற்றி வந்திருக் கிறார். இதனால் அவர் திருநெல்வேலி நகரிலேயே பின்னர் குடியிருந்து வந்திருக்கிறார் என்பது, அவர் தம் வாழ் நாளில் வெளியிட்ட 'பத் சாகித்தியங்கள்' என்ற நூலில், திருநெல்வேலி புதுத் தெருவிலிருக்கும் அழகிய சொக்க நாத பிள்ளை' என்று தம்மைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் உறுதிப்ப டுகின்றது. ஆயினும், அது தெற்குப் புதுத் தெரு வா அல்லது கீழப் புதுத் தெருவா (இன் றைம்' பாரதியார் தெரு) என்று தெரிய வில்லை , அழகிய சொக்க நாத பிள்ளை' தமது இருபத்தைந்தாம் வயதில், 1861 ஆம் ஆண்டில் வள்ளியம்மை என்ற மாதை மணம் புரிந்தார், இந்தத் தம்பதிகளுக்கு நெல்லை நாயகம் என்ற 1 கனும், சுப்பம்மாள் என்ற மகளும் பிறந்தனர். எனினும் வள்ளியம்மை 1879 ஆம் ஆண்டில் காலமாகி விட்டார். இவர் நோ யுற்று நெடுங்காலம் 4.1டுக்கையில் கிடந்தபோது, அழகித சொக்க நாத பிள்ளை தம் மனைவிக்கு உற்ற துணையாக இருந்து பணிவிடை செய்து வந்தார் என்றும், அவரே தமது கவியொன்றில் தம்மைப் பற்றிப் பாடியது போல். தேளும் பாம்பும் போலப் பார்த்த வறுமையும் கடனும் படுத்து கின்ற' பாட்டுடன்தான் அவர் வாழ்ந்து வந்தார் என்றும் வெ. ப. சு. எழுதுகிறார். முதல் மனைவியின் மரணத்துக்குப் பின் . அழகிய சொக்க நாத பிள்ளை 1880 ஆம் ஆண்டில் காந்திமதி என்னும் மா ைத ஃணைந்து கொண்டார். இரண்டாவது மனைவி மூலம் இவருக்கு மேலும் மக்கட்பேறு கிட்டியதா என்பதை இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. அழகிய சொக்க நாத பிள்ளை ஆங்கில அறிவும், தமிழ்ப் புலமையும், கவிபாடும் ஆற்றலும் மிக்கவராக இருந்ததோடு, இசையோடு பாடுவ திலும் வல்லவராக இருந்தார் என்றும், அழகிய சொக்க தாத பிள்ளை பாடுவதைக் கேட்டுத் தாம் பெருமிதம் கொண்டதாகவும், தாமும் தமிழ்