பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கருதினர். ஆகையில்ைதான்,தம்முடைய வாழ்க்கைவரலாறு நூலுக்கு “உண்மையின் ஆய்வு’ (சத்திய சோதனை-My Experiment with Truth] Gror p @Luff Qirogotif, gu உள்ளத்தில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்தையும், தம் மெய்வழி நிகழும் ஒவ்வொரு செயலேயும் சத்தியம் என்னும் சோதனைக் குழாயிலிட்டு ஆராய்க்து பார்ப்பார். சத்தியத் தின் அடிப்படையில் அவைகள் அமைந்திருங்தால் மேற் கொள்வார்; மாருக இருந்தால் ஒதுக்கிவிடுவார். சத்தியம் என்பது அவருடைய மனச்சாட்சி. அவருடைய மனச் சாட்சிக்குப் பொருங்திய எந்தச் செயலேயும் இமயமே தடுத்துகிறுத்தினுலும் செய்யாமல் விடமாட்டார்.அவரோடு அரசியல் வாழ்வில் பங்குகொண்டிருந்த ஒவ்வொருவரும் இவ்வுண்மையைப் பட்டறிவால் உணர்ந்திருப்பர்.

காங்தியடிகளின் உயிர்காடியாக விளங்கிய இச்சத்தியம் இளமையிலேயே அவருடைய உள்ளத்தில் ஊறிவிட்டது. காந்தியடிகள் தாம் கற்ற பள்ளிப் படிப்பை எப்பொழுதும் பாராட்டிக் கூறியதில்லை. அக்காலப் பள்ளிப்படிப்புப் பயனற்றது என்று அடிக்கடி கூறுவார். தாம் பள்ளிப் படிப்பில் கற்றுக் கொண்டதைவிட நாடகங்களின் மூலம் கற்றுக் கொண்டதுதான் அதிகம் என்று குறிப்பிடுகிரு.ர். அவருடைய இளமை வாழ்வைச் செப்பனிட்டுச் சத்தியத் தின் வழியில் செலுத்தக் காரணமாக இருந்தவை. சிரவணனின் பெற்றாே ரன்பு (சிரவண பித்ரு பத்தி நாடகம்) அரிச்சந்திரா என்ற இரு நாடகங்களே. (கம் அமரகவி பாரதியார் கூட, பெண்ணுரிமை பற்றி உணர்ச்சிமிகுந்த பாடல்களைப் படுவதற்கு, இளமையில் கண்ட பாஞ்சாலி யின் துகிலுரிதல் நாடகமே காரணம் என்று குறிப்பிடு கிறார்)

சிரவணன் என்பவன் ஒரு பார்ப்பனச் சிறுவன். அவனுடைய பெற்றாேர்கள் முதுமையுற்றவர்கள்; கண்