பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

என்ற நூலும், உருசியப் பேரறிஞரான தால்ஸ்தாய் எழுதிய ஆண்டவன் அரசு உனக்குள்ளே’ என்ற நூலும், ஆங்கிலப் பேரறிஞரான இரஸ்கின் எழுதிய கடைசி மனிதனின் கல்வாழ்வு’ (Unto This Last) என்ற நூலும் ஆகும். தால்ஸ்தாயை அடிகள் தம்முடைய குருநாதராகப் போற்றுவார்.

இனிச் சமயத்தைப் பற்றிக் காங்கியடிகள் கூறியுள்ள பொன் மொழிகள் சிலவற்றைக் காண்டோம்.

‘சமயம் சமயம் என்று எல்லாவற்றையும் நான் ஏற்று. கொள்ளமாட்டேன். சமயத்தின் பெயரால் செய்யப்படும் கொடுமைகளே எலேன். பண்டை நூல்கள் தெய்விக மானவைகளே. ஆலுைம் அவைகளிலுள்ள கருத்துக்கள் என் அறிவிற்குப் பொருங்தியனவாயிருத்தல் வேண்டும். இல்லையேல், நூல்களின் கடவுட்டன்மையையும் கான் மறுப்பேன்.”

‘சமயமென்றால் எது சமயம்? கரவும், மூட பக்தியும். கண்மூடி வழக்கமும் கொண்டது சமயமன்று.”

‘உயிரை, வருவாயை, வாணிகத்தை, குடும்பத்தை, உடலே, எதையும் பொருளாக மதித்தல் கூடாது. சத்தியாக் கிரகம் மனித உரிமையைப் பற்றிய போர். ஆதலால் இது சமயப் போராகிறது. மனச் சான்றுரிமை குறித்துப் போராடுவது சமயப் போராகவே இருத்தல் வேண்டும்.’

‘எல்லா உலகங்கட்கும் பொதுவாயிருப்பது ஒன்று. அஃது எங்கும் நீக்கமற கிறைந்தது. அது சத்தியப்பொருள். அதை நேராகக் காணவிரும்பும் ஒருவன் என் செய்தல் வேண்டும்? அவன். படைப்பில் இழிந்த ஒன்றையும் தன்னைப்போல் நேசித்தல் வேண்டும். சத்தியத்தில் எனக்கு அளவிலா அன்பு உண்டு. அவ்வன்பு என்னை அரசியலிலுஞ் செலுத்தியது. இதல்ை அரசியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்பு எனக்கு விளங்கியது. இரண்டிற்கும்