பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

தொடர்பில்லை என்று சொல்பவன், சமய நுட்பம் இன்ன தென்று தெரியாதவன் என்று தயங்காமல் கூறுவேன்.’

‘சமயமின்றி அரசியலில்லை. சமயத்துக்கு அரசியலும் ஒரு துணே. சமயமற்ற அரசியல், கூற்றுவன் போன்றது.

‘யான் அரசியல் வாதியா? சமயவாதியா? யான் அரசியல் நாடகம் கடிக்கும் சமயவாதி.’

“சமயம் ஒரு முதல்; காட்டுப்பற்று அதன் சினை. சமயத்துக்கு காட்டுப்பற்று கீழ்ப்பட்டது.’

7. புலால் மறுத்தல்

உலகப் பேரறிஞர் பெர்னர்டுஷாவைப்பற்றி அறியாத வர்கள் இருக்க முடியாது. அவர் இங்கிலாந்து காட்டில் வாழ்ந்த சொல்லேருழவர்; ஷேக்ஸ்பியருக்கு அடுத்தாற். போல் ஆங்கிலத்தில் பெரிய நாடகாசிரியர்; பல்கலை மேதை. இவர் தொண்ணுாறு ஆண்டுகட்குமேல் உயிர் வாழ்ந்த பழுத்த கிழம், தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் தவறி விழுந்து, கால் ஒடிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் மரக்கறி உண்பவர். இவருக்கு மருத்துவம் புரிந்த மருத்துவர்கள். இவரை எவ்வாறேனும் புலால் உணவு உண்ணுமாறு செய்யவேண்டும் என்று பெரிதும் முயன் றனர். அவர் புலால் உணவு உண்டால் இன்னும் சிலகாலம் உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கருதினர். இக் கருத்தைப் பெர்னர்டுஷாவிடம் எடுத்துக் கூறினர். அதற்குப்பெர்னர்டுஷா, ‘நண்பரே! எனக்குதொண்ணுாறு வயதுக்குமேல் ஆகிவிட்டது. புலால் உணவு உண்ணு வோரில் என்னைவிட வயதில் மூத்தவர் யாராவது இலண்டன் மாநகரில் இருந்தால் தயவுசெய்து அவர்களை என்னிடம் அழைத்துக் கொண்டு வாருங்கள். அவர்களைப் பார்த்து, நானும் புலால் உணவை மேற் கொள்கிறேன்” என்று சொன்னர்.